என் மலர்
நீங்கள் தேடியது "Power poles were damaged"
- மின் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
- பேரிகார்டுகள் சூறைக் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 'அக்னி' நட்சத்திரம் முடிந்து பல நாட்களாகியும், சராச ரியாக 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இதனால், மக்கள் பகலில் நடமாட முடியாமல் தவித்தனர். இரவிலுல் புழுக்கம் தாங்க முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்நிலையில், வேலூரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
ஆனால், மதியத்துக்கு மேல் வேலூர், சேண்பாக்கம், கொணவட் டம், சத்துவாச்சாரி, காட் பாடி, பாகாயம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின்னர் திடீரென பலத்த காற்று வீசியது. இந்த சூறைக்காற்றால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மரக்கி ளைகளும், மின் கம்பங்களும் சாலையிலும், தெருக்க ளிலும் முறிந்து விழுந்தன.
கலெக்டர் அலுவல கத்தில் மட்டும் 4 மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், தேசிய நெடுஞ் சாலையில் விபத்தை குறைக்கும் வகையில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் சூறைக் காற்றுக்கு தூக்கி வீசப்பட்டது.
இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்றனர்.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால், முன்னெச்சரி க்கை நடவடிக்கையாக மின் வினியோ கம் நிறுத்தப்பட்டது. பலத்த மழை காரணமாக வேலூர், சம்பத் நகர், திடீர் நகர் உள்ளிட்ட தாழ்வான குடி யிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மதியம் 3 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் தொடங்கிய மழை, மாலை 5 மணிவரை நீடித்தது. இரவில் விட்டு விட்டு மழை பெய்தது.
வேலூர் மற்றும் காட்பாடி, சத்துவாச்சாரி பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் சுறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
குடியாத்தம்-பலமநேர் சாலையில் கள்ளூர்மேடு என்ற பகுதியில் பெரிய புளியமரம் சாய்ந்தது அப்போது அந்த புளியமரம் மின்கம்பங்கள் மீது சாய்ந்ததால் பல மின்கம்பங்கள் சேதம் அடைந்தன அந்த மரத்தின் ஒரு பகுதி அருகில் இருந்து குடிசை மீதும் விழுந்தது.
குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் முக்கிய சாலையாக பலமநேர் சாலை இருப்பதால் புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உடனடியாக ஜே.சி.பி. பெக்லைன் எந்திரம் மூலம் புளிய மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
உயிர் தப்பிய 2 பெண்கள் கள்ளூர் கே.எம்.ஜி.கார்டன் பகுதியில் குடிசை வீட்டில் இருந்த சாந்தி (50)அவரது உறவினர் 80 வயது மூதாட்டி இருவரும் வீட்டில் இருந்தபோது சாய்ந்த புளிய மரத்தின் ஒரு கிளை குடிசை மீது விழுந்து அமுக்கியது.
அப்போது அதிர்ஷ்டவசமாக 2 பெண்களும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
அணைக்கட்டு
அணைக்கட்டு பகுதியில் நேற்று சுமார் மாலை 5.30 மணி அளவில் திடீரென கனமழை பெய்தது.
சரிந்து விழுந்த அம்மன் கட்டவுட் அப்போது எதிர்பாராத வீதமாக மின்கம்பத்தோடு சேர்த்து திருவிழாவிற்க்காக அமைக்கப்ட்டு இருந்த கட்டவுட் சூறைக்காற்றில் திடீரென முறிந்து விழுந்தது.
இதில் மின்சார கம்பிகள் அறுந்து தீப்பொறி ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் ஆகியும் மின்சாரம் இல்லாததால் மக்கள் இருளில் கடும் அவதியடைந்தனர்.
திடீரென முறிந்து விழுந்த கட்டவுட்டால் அதன் கீழ் இருந்த மக்கள் பதட்டத்துடன் ஓட்டம் பிடித்தனர். அதில் அதிர்ஷ்டசமாக நொடி ப்பொழுதில் அனைவரும் உயிர் தப்பினர்.
வேலூரில் நேற்று மதியம் முதல் இரவு வரை மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் வீட்டில் விளக்குகள் மெழுகுவர்த்தி ஏற்றினர்.
நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் கடைகளில் மெழுகுவர்த்திகள் தீர்ந்து போனது.
இரவு 7 மணிக்கு மேல் பல இடங்களில் உள்ள கடைகளில் மெழுகு வர்த்திகள் விற்று தீர்ந்தன. இதனால் மெழுகு வர்த்திகளை வாங்க பொதுமக்கள் படாதபாடு பட்டனர். வீடுகளில் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து இருந்ததை காண முடிந்தது.
மின்சாரம் இல்லாததால் சமையல் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பொதுமக்கள் சாலையோரங்களில் இருந்த கடைகளுக்கு சென்றனர்.
ஆனால் வழக்கமான கடைகளும் மூடப்பட்டிருந்தன. பெரிய ஓட்டல்களில் இரவு 8 மணிக்குள் இட்லி தோசை உள்ளிட்டவை தீர்ந்து போனது. குழந்தைகளுக்கு இட்லி வாங்க சென்றவர்கள் கூட கிடைக்காமல் ஏமாந்து சென்றனர்.






