என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே பதிவு எண்ணில் 2 வேன்கள்- வேலூர் ஆவினில் 6 அதிகாரிகள் அதிரடி மாற்றம்
    X

    ஒரே பதிவு எண்ணில் 2 வேன்கள்- வேலூர் ஆவினில் 6 அதிகாரிகள் அதிரடி மாற்றம்

    • பிரச்சினையில் தொடர்புடைய 2 வேன்களின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
    • சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் நிறுவனவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு ஆவின் வளாகத்தில் பால் ஏற்றிச்செல்ல ஒரே பதிவு எண் கொண்ட 2 வேன்கள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இரு வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆவணங்கள் இல்லாத ஒரு வேனை அதன் உரிமையாளர் மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் சேர்ந்து ஆவின் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்து எடுத்துச்சென்றனர்.

    இந்த பிரச்சினையில் தொடர்புடைய 2 வேன்களின் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆவின் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும் ஆவின் செயல் அலுவலர்கள் 6 பேர் மீது புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து புகாருக்கு உள்ளான 6 செயல் அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் சில அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×