என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "They were engaged in the process of giving notice"

    • ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு
    • மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்

    பொன்னை:

    பொன்னை அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    காட்பாடி தாலுகா பொன்னை அருகே உள்ள குறவன் குடிசைப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் அரசு நிலம் உள்ளது.இதனை ஒரு சிலர் ஆக்கிரமித்து மாடி வீடுகள் மற்றும் குடிசைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொக்லைன் இந்திரங்களுடன் சென்றனர்.

    அப்போது அங்குள்ள பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பிச்சாண்டி என்பவரின் மனைவி ஈஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அவரை பொன்னை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் பொக்லைன் எந்திரத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    இதனையடுத்து துணை தாசில்தார் முஹம்மத் சாதிக் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்டு திரும்பி சென்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×