என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பஸ்களை கிரீன் சர்க்கிள் வழியாக இயக்க அனுமதிக்க வேண்டும்
    X

    போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் கோரிக்கை மனு அளித்த காட்சி.

    தனியார் பஸ்களை கிரீன் சர்க்கிள் வழியாக இயக்க அனுமதிக்க வேண்டும்

    • பயணிகளுக்கு மிக காலதாமதம் ஏற்படுகிறது
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கோரிக்கை மனு

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நிர்வாகிகள் வி.உமாசங்கர், சிவகுமார், ராஜா, சதீஷ், மதன், குணா, விக்னேஷ் ஆகியோர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனை நேரில் சந்தித்தனர்.

    அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது; திருவண்ணாமலை- ஆரணி மார்க்கமாக வேலூர் வரும் பயணிகள் பஸ்கள் நேஷனல் சர்க்கிளில் இருந்து புதிய பைபாஸ் வழியாக திருப்பிவிடப்பட்டு ரெயில்வே லைன் வழியாக திரும்பி பெங்களூர் சென்னை சர்வீஸ் சாலை வழியாக சுற்றுவழியில் புதிய பஸ் நிலையம் செல்கிறது.

    இதனால் பயணிகளுக்கு மிக காலதாமதம் ஏற்படுகிறது. எனவே நேஷனல் சிக்னலில் இருந்து கிரீன் சர்க்கிள் வழியாக பஸ்கள் புதிய பஸ் நிலையம் செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×