என் மலர்
நீங்கள் தேடியது "They went to the Vellore fort circuit"
- மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி, நடுத்தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை மகன் குருபிரசாத் (வயது 28). இவர் வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று தன்னுடன் வேலை செய்யும் சஞ்சய் மற்றும் விக்னேசுடன் பைக்கில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சென்றனர்.
பைக்கை குருபிரசாத் ஓட்டி சென்றார். அப்போது அங்குள்ள ெரயில்வே கேட்டில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனை செல்லும் வழியில் குருபிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்பாடி ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






