என் மலர்
வேலூர்
- கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த சாஸ்திரி நகர் அருகே உள்ள பகவதி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 29), கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக, லோகேஷை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் மாமியார் வீட்டுக்குச் சென்று லோகேஷ், மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். லோகேஷ் வீட்டிற்கு வர அவரது மனைவி மறுத்துவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று இரவு வீட்டில் இருந்த லோகேஷ் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லோகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடன் தொல்லையால் இறந்தாரா?
- போலீசார் விசாரணை
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த ஏகாம்பரநல்லூரை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் ஹரிஹரன் (வயது 27). இவர் சிப்காட்டில் உள்ள தனியா தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த ஹரிஹரன் முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு வந்தார். ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் ஹரிகரன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காட்பாடி ெரயில்வே போலீசார் ஹரிகரன் உடலை மீட்டனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன் கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி இறந்தாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகாதேவமலை மகானந்த சித்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
- விழா ஏற்பாடுகளை பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்
குடியாத்தம்:
குடியாத்தம் பிச்சனூர் ஆணைகட்டி கணபதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தில் மகாதேவமலை மகானந்த சித்தர், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யா னந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவ னங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி, முன்னாள் நகரமன்ற தலைவர் த.புவியரசி, நகரமன்ற உறுப்பினர் என்.கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கவுரவத் தலைவர் ஏ.ராஜேந்திரன், தலைவர் ஏ.தங்கமணி, செயலாளர் எம்.வஜ்ரவேல், பொருளாளர் டி.கார்த்திகேயன், துணைத் தலைவர் ஜி காந்தி, துணை செயலாளர் கே.சுப்பிரமணி உள்பட விழா குழுவினர், பொது மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
- ரூ.19.60 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சி கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார், பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் முன்னிலை வகித்தார்.
பேரூராட்சி பணியாளர் சந்தோஷ் தீர்மானங்களை வாசித்தார்.
இதில் 15-வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் கழிப்பிடங்கள் பழுது நீக்கம் பணி மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
மேலும் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கழிப்பிடங்களை ரூ.5 லட்சத்தில் பழுது பார்த்தல், கிருஷ்ணசாமி நகரில் ரூ.3 லட்சத்தில் கழிப்பிடத்தை சீரமைத்தல், வேப்பங்கால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் கழிப்பிடம் அமைத்தல், ரூ.6.60 லட்சத்தில் ஈரக்கழிவு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
- காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பரிமளா (வயது 40), மகன் அருண்ராஜ் (19). பழனிவேல் குடும்பத்துடன் காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. காரின் முன் இருக்கையில் இருந்த அருண்ராஜ், பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- பெண்ணை தாக்கியதாக கைது
- நள்ளிரவு போராட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு
வேலூர்:
வேலூர் பாகாயத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி துர்கா. கடந்த 26 -ந் தேதி இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது அப்போது எதிர் வீட்டை சேர்ந்த சக்திவேல் என்பவர் கணவன் மனைவி இருவரையும் கண்டித்து உள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சக்திவேலை, வெங்கடேசன் தம்பதியினர் திட்டி உள்ளனர். இதுகுறித்து சக்திவேல் தான் கார் டிரைவராக வேலை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தனிடம் கூறினார். கோவேந்தன் துர்காவை திட்டி தாக்கியதாக பாகாயம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கொலை மிரட்டல் விடுத்தல், பெண்ணை அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் கோவேந்தனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை ஆஜர்படுத்துவதற்காக வேலூர் அண்ணா சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் அண்ணா சாலையில் குவிந்தனர்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் கைதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவரை ஜெயிலுக்கு அழைத்துச் செல்லும்போது மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனால் நள்ளிரவில் அங்கு பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
கைதான கோட்டி என்கிற கோவேந்தனை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் மீது உரிமையாளர் புகார்
- நடவடிக்கை எடுக்கப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கங்கநல்லூர் சேர்ந்தவர் விநாயகம்.இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து மண், மணல் ஓட்டி வருகிறார்.
அனுமதி இல்லாமல் மண் ஏற்றி சென்றதாக இவரது 2 டிப்பர் லாரியை பள்ளிகொண்டா போலீசார் பறிமுதல் செய்தனர். விநாயகத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சுமார் 4 மாதங்களுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த விநாயகம் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளுக்கு வேலூர் கனிமவளத்துறையில் அபராத தொகையை செலுத்தினார் அதற்கு ண்டான ஆவணத்துடன் தனது லாரிகளை மீட்க பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது லாரியின் பாகங்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருட்டு
இரண்டு லாரிகளில் இருந்த தலா 15 ஆயிரம் மதிப்பிலான செல்ப் மோட்டார், 13 ஆயிரம் மதிப்பிலான பேட்டரி, 55 ஆயிரம் மதிப்பிலான டயர்கள் ,12 ஆயிரம் மதிப்பிலான டைனமோ, 25 ஆயிரம் மதிப்பிலான ரேடியேட்டர், 28 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலகை,8 ஆயிரம் மதிப்பிலான டூல்ஸ் மற்றும் 18 ஆயிரம் மதிப்பிலான ஸ்டெப்னி டயர் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் விநாயகம் கேட்டார். லாரியை பறிமுதல் செய்த போது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் தற்போது மாறுதலாகி சென்றுள்ளனர்.
தங்களுக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தனர். இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விநாயகம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனிடம் புகார் அளித்தார்.
இதனை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
- சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
- மேற்பார்வை பொறியாளர் தகவல்
வேலூர்:
வேலூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் கோட்டங்களில் மின்தடை, மின்விபத்துகள், அறுந்து தரை யில் விழுந்துகிடக்கும் மின்கம்பிகள், மின்மீட்டர், தொய்வான மின்கம்பிகள் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார் களை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற மின்சார புகார்கள் இருந்தால் 94987 94987 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். அதன்பேரில் உடனடியாக அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
இந்த தகவலை வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
- ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
- கோட்டைக்கு செல்ல அனுமதி மறுப்பு
வேலூர்:
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. ஈகைத்திருநாள் எனப்படும் இந்த பண்டிகை நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வார்கள்.
வேலூரிலும் அனைத்து மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். குழந்தைகள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
வேலூர் கஸ்பா, ஆர்.என் பாளையம், சின்ன அல்லாபுரம், தொரப்பாடி, சத்துவாச்சாரி, காட்பாடி எம்ஜிஆர் நகர், சைதாப்பேட்டை, மக்கான், ஆற்காடு சாலை, முள்ளிப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் இஸ்லாமியர்கள் காலை முதல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர், ராணிப்பேட்ைட
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், கீழ்விஷாரம், வாலாஜா, அரக்கோணம், சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், உமராபாத், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பெரிய மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
வசதியில்லாத ஏழை இஸ்லாமியர்கள் மற்றும் கரோனாவால் வாழ்வா தாரத்தை இழந்த இஸ்லாமியர் களுக்கு, வசதி படைத்த இஸ்லா மியர்கள் இறைச்சி வகைகளை வழங்கி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள 15 மசூதி களில் சிறப்பு தொழுகை நடந்தது. ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டவர்கள் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு குர்பானி கொடுத்தனர்.
அதேபோல், சேத்துப்பட்டு பழம்பேட்டையில் உள்ள பெரிய பள்ளிவாசல், சிறிய பள்ளிவாசல், ஈத்கா மைதானம் உட்பட இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.
பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி கொடுத்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வேலூர் கோட்டை வளாகத்தில் மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. காந்தி சிலையின் அருகே கோட்டைக்கு செல்லும் இருபுறமும் இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அதிகாலையில் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் கோட்டைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் வெளியே உள்ள பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
மேலும் கோட்டையை சுற்றிப்பார்க்க வந்தவர்க ளையும், ஜலகண்டே ஸ்வரர் கோவிலுக்கு வந்தவர்களையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
- கடந்த 25 ஆண்டுகளாக இந்த கோவில்களில் திருவிழா நடத்தவில்லை.
- 100 ஆடுகள் காட்டு காளியம்மனுக்கு பலியிடப்பட்டன.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 84 மலை கிராமங்கள் உள்ளன. பீஞ்ச மந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு சுயம்பாக உள்ள பெருமாள் வடிவில் புற்று, காட்டு காளியம்மனை தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.
பல்வேறு காரணங்களால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த கோவில்களில் பொதுமக்கள் திருவிழா நடத்தவில்லை.
இந்த நிலையில் கடந்த மாதம் புற்றுவடிவிலான பெருமாள் கோவிலில் திருவிழா கொண்டாடினர் .
அப்போது காட்டுக்காளி அம்மன் கோவில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு காப்பு கட்டி கொண்டனர். இதற்காக கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் கட்டியாப்பட்டு கிராமத்தில் காட்டுக் காளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.
அவர்கள் மலையில் உள்ள மூங்கில் மரம் ஒன்றை அம்மனாக வழிபட்டு வருகின்றனர். அந்த மூங்கில் மரத்திற்கு வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்தனர்.
கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இந்த திருவிழாவில் வெளியூர்காரர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கிராம எல்லையில் வெளியூர்க்காரர்கள் வருவதை தடுக்க காவலுக்கு இருந்தனர்.
மேலும் அங்குள்ள ஆலமர விழுதில் குழந்தை வரம் வேண்டியும் திருமணம் நடக்க வேண்டிய ஒவ்வொரு குடும்பத்தினர் காசு முடிந்த துணிகளை கட்டி வேண்டிக்கொண்டனர்.
தொடர்ந்து ஒரு வீட்டுக்கு 2 ஆடுகள் என மொத்தம் 100 ஆடுகள் காட்டு காளியம்மனுக்கு பலியிடப்பட்டன.
திருவிழா முடிந்த பிறகு வெளியூரில் உள்ள உறவினர்களை வரவழைத்து ஆட்டுக்கறி விருந்து அளித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ஆடுகளை பலியிடுவதால் நாட்டில் பஞ்சம் பட்டினி நோய் நொடியின்றி மக்கள் நலமுடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.
காட்டு கோவில் திருவிழாவில் வெளியூர் ஆட்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது. அதனை மீறி யாராவது கலந்து கொண்டால் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்துவிடும்.
இதனால் நாங்கள் திருவிழா நடைபெறும் நேரத்தில் காவலுக்கு இருக்கிறோம். திருவிழா முடிந்து மறுநாள் வெளியூர்க்காரர்கள் உறவினர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வீடு தோறும் கறி விருந்து பரிமாறப்படுகிறது என்றனர்.
- திருமணமாகாத விரக்தியில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது 32). இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவருக்கு 32 வயது ஆகியும் திருமணம் நடைபெறாமல் இருந்து வந்துள்ளது. இதனால் மனஉளைச்சளுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
நீண்ட நேரமாகியும் சீனிவாசன் அறையில் இருந்து வெளியே வராததால் இவரது தாயார் கதவை திறந்து பார்த்தார். அப்போது சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண மாகாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் விசாரணை.
- சொத்து வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஓழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா முன்னிலையில் வந்தது.
அப்போது, இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து நீதிபதி வசந்த லீலா உத்தரவிட்டுள்ளார்.






