என் மலர்
நீங்கள் தேடியது "லாரி பாகங்கள் திருட்டு"
- போலீசார் மீது உரிமையாளர் புகார்
- நடவடிக்கை எடுக்கப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உறுதி
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கங்கநல்லூர் சேர்ந்தவர் விநாயகம்.இவர் சொந்தமாக டிப்பர் லாரி வைத்து மண், மணல் ஓட்டி வருகிறார்.
அனுமதி இல்லாமல் மண் ஏற்றி சென்றதாக இவரது 2 டிப்பர் லாரியை பள்ளிகொண்டா போலீசார் பறிமுதல் செய்தனர். விநாயகத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
சுமார் 4 மாதங்களுக்கு மேலாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த விநாயகம் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளுக்கு வேலூர் கனிமவளத்துறையில் அபராத தொகையை செலுத்தினார் அதற்கு ண்டான ஆவணத்துடன் தனது லாரிகளை மீட்க பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது லாரியின் பாகங்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
திருட்டு
இரண்டு லாரிகளில் இருந்த தலா 15 ஆயிரம் மதிப்பிலான செல்ப் மோட்டார், 13 ஆயிரம் மதிப்பிலான பேட்டரி, 55 ஆயிரம் மதிப்பிலான டயர்கள் ,12 ஆயிரம் மதிப்பிலான டைனமோ, 25 ஆயிரம் மதிப்பிலான ரேடியேட்டர், 28 ஆயிரம் மதிப்பிலான கூடுதல் பலகை,8 ஆயிரம் மதிப்பிலான டூல்ஸ் மற்றும் 18 ஆயிரம் மதிப்பிலான ஸ்டெப்னி டயர் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் விநாயகம் கேட்டார். லாரியை பறிமுதல் செய்த போது போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் தற்போது மாறுதலாகி சென்றுள்ளனர்.
தங்களுக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தனர். இதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விநாயகம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணனிடம் புகார் அளித்தார்.
இதனை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.






