என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievances will be addressed"

    • சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • மேற்பார்வை பொறியாளர் தகவல்

    வேலூர்:

    வேலூர் மின்பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் கோட்டங்களில் மின்தடை, மின்விபத்துகள், அறுந்து தரை யில் விழுந்துகிடக்கும் மின்கம்பிகள், மின்மீட்டர், தொய்வான மின்கம்பிகள் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார் களை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற மின்சார புகார்கள் இருந்தால் 94987 94987 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம். அதன்பேரில் உடனடியாக அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.

    இந்த தகவலை வேலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

    ×