என் மலர்tooltip icon

    வேலூர்

    • போக்சோவில் கைது
    • திருமணம் செய்வதாக ஏமாற்றினார்

    வேலூர், ஜூலை.2-

    காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண். இவரும் காட்பாடி அடுத்த சேனூர் இந்திரா நகரை சேர்ந்த புத்தபிரியன் (வயது 26) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு புத்தபிரியன் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்து உள்ளார்.

    மைனர் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி புத்த பிரியனை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளதால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என புத்தபிரியனை கட்டாயப்படுத்தி உள்ளார். புத்தபிரியன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்தார். இது குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராணி புத்தபிரியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.
    • மின்விசிறியில் பிணமாக தொங்கினார்

    வேலூர், ஜூலை.2-

    வேலூர், வேலப்பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத் (வயது 46).பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    தினமும் அதிக அளவில் மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் வயிற்று வலிக்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சம்பத் தன்னுடைய அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சம்பத் தூக்கில் தொங்கியதைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து வேலூர் தெற்கு போலீசிற்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பத் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரதட்சனை கேட்டு அவரது மகளை தாய் வீட்டிற்கு அனுப்பியதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார். போலீசார் இறந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் இறந்து கிடந்த முதியவர் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் (வயது 65) என தெரிய வந்தது. ஜெகநாதன் தனது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார்.

    அப்போது 30 பவுன் நகை, சீர்வரிசை பொருட்களை கொடுத்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜெகநாதன் மருமகன் கூடுதல் வரதட்சனை கேட்டு அவரது மகளை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    இதனால் விரக்தியில் இருந்த ஜெகநாதன் நேற்று முன்தினம் இரவு கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காட்பாடியில் முத்தரசன் பேட்டி
    • தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது.

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட கோரிக்கை மாநாடு இன்று நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் சிவக்குமார் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தி.மு.க. அரசிற்கும், கூட்டணி கட்சியினருக்கும் கண்டனம் தெரிவித்தார்.

    தமிழகமே எதிர்த்து நிற்கும்

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதைப் பேச வேண்டுமோ அதை தான் பேசி வருகிறார். தமிழக அரசின் ஒப்புதல் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது.

    கர்நாடக துணை முதல்-அமைச்சர் சிவகுமார் அரசியல் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மேகதாது அணையை கட்டியே தீர்வேன் என கூறி வருகிறார்.

    அது எப்படி கட்ட முடியும். அரசியலுக்காக இதுபோன்று பேசி காலத்தையும், நேரத்தையும் வீணாக்க வேண்டாம். ஒருபோதும் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கு தமிழகமே எதிர்த்து நிற்கும்.

    தடையின்றி கொடுக்க வேண்டும்

    தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை தடையின்றி கொடுக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை கர்நாடகா அரசு மதித்து செயல்பட வேண்டும்.

    தமிழகத்திற்கான பங்குகளை கர்நாடகா அரசு வழங்க வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • டோலி கட்டி தூக்கி செல்ல மறுத்தார்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் நடவடிக்கை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (22). தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சிவகாமி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் சிவகாமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

    சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

    சிவகாமியை முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து நடை பயணமாக ஆஸ்பத்திரி செல்ல அழைத்து வந்தனர்.

    கர்ப்பிணி பெண் பிரசவ வலியோடு நடந்தார். தெள்ளை மலை கிராமம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.

    சுகப்பிரசவம்

    பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

    இதனை அடுத்து நேற்று மாலை 7 மணி அளவில் , தனியார் மருத்துவமனையில் இருந்த தாய் மற்றும் குழந்தை ஆகியோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இரவு நேரம் என்பதால் சாலை வசதி இல்லாத கரடு, முரடான மலைப்பாதையில் பயணம் செய்ய முடியாத சூழல் நிலவியது.

    எனவே சிவகாமி மற்றும் குழந்தையுடன் அவரது குடும்பத்தினர் தெள்ளை மலை கிராமத்தில் உள்ள துத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பாபு வீட்டில் இரவு தங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் தெள்ளை மலை கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்து குழந்தையுடன் தாய் சிவகாமியை, தாசில்தார் சென்ற ஜீப் மூலம் கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு தாய் சிவகாமி மற்றும் குழந்தைக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 2 பேரும் ஆரோக்கியமாக இருப்பதால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு, கீழ்கொத்தூர், முத்துக்கு மரன் மலை, பீஞ்சமந்தை, ஜார்தான்கொள்ளை வழியாக முத்தன் குடிசை கிராமத்திற்கு தாயுடன் குழந்தையை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • முதியவர்கள் யாராவது மாயமானார்களா என விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் சாலையில், கோட்டை அகழியின் மேல் மீன் விற்பனை செய்யும் நிலையம் உள்ளது.

    மீன் விற்பனை நிலையம் அருகே அகழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக மிதந்தார். இதை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் அகழியில் இருந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் முதியவர்கள் யாராவது மாயமானார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் இன்று காலை கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பயிற்சிக்கு வந்த போது பரிதாப சம்பவம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருச்சி மாவட்டம் உறையூர் லாவண்யா அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர். திலீப் (வயது 31). டாக்டரான இவர் தியாக துருகத்தில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.

    வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் ஒரு வார பயிற்சிக்காக கடந்த 28-ந தேதி வேலூருக்கு வந்தார்.

    சத்துவாச்சாரி ஆர்டிஓ ரோட்டில் உள்ள சி.எம்.சி விடுதியில் அறை எடுத்து தங்கினார். விடுதி அறைக்கு சென்ற திலீப் 2 நாட்களாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திலீப் தரையில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி உலக சாதனைக்காக 1 மணி நேரத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டது.

    அதன்படி கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம் காட்டுபுத்தூர் ஊராட்சியில் நடந்த விழாவிகக்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலாகோபி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கணியம்பாடி ஒன்றியகுழு துணை தலைவர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பென்னாத்தூர் தி.மு.க. பேரூர் செயலாளர் அருள்நாதன் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.

    இதேபோல் ஊசூர் அடுத்த தெள்ளூர் ஊராட்சியில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவிசுரேஷ் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி செயலாளர் முகிலன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். ஒரு மணி நேரத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

    • ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை ஊராட்சியில் உள்ள அ.கட்டுபடி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து காணப்பட்டது. குண்டும், குழியுமாக கிடந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி சாலை அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், வேலாயுதம், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணை தலைவர் தென்போஸ்கோ வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • 15 வார்டுகளிலும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் கட்டமைப்புகள் மேற்கொள்வது தொடர்பாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, ஒடுகத்தூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சத்யாவதி பாஸ்கரன் தலைமை தாங்கினார், செயல் அலுவலர் ராமு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர் மதன் தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.25.30 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் 15 வார்டுகளிலும் புதிய குடிநீர் பைப்லைன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    • 23 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் உதவித்தொகை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2021-2022 ஆம் ஆண்டில் 946 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1,25,84,600 மதிப்பில் 23 வகையான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    அதேபோல் 4548 மாற்றுத்திறனாளி களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் ரூ.8,18,64,000 மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகையும், 62 மாற்றுத்திறனாளிகளுக்கு குறுதொழில் அல்லது பெட்டிக்கடை தொடங்க மானியமாக ரூ.11,99,920 உதவித்தொகை வழங்கப்பட்டது.

    மேலும் 2 மாற்றுத்திற னாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் உதவித்தொகையும் என மொத்தம் 5ஆயிரத்து558 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.9,57,48,520 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    2022-2023-ம் ஆண்டில் 726 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.1,00,46,800 மதிப்பில் 23 வகையான உதவி உபகரணங்களும், 4,861 மாற்றுத்திறனாளி களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் ரூ.11,66,64,000 மதிப்பில் பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்பட்டது.

    அதேபோல் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு குறுதொழில் அல்லது பெட்டிக்கடை தொடங்க மானியமாக ரூ.9,99,920 உதவித்தொகையும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க ரூ.50 ஆயிரம் உதவித்தொகையும் என 5,632 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.12,82,10,720 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டுள்ளன.

    அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 2021- 2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22கோடியே 39 லட்சத்து 59ஆயிரத்து 240 மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது என கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

    • இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    வேலூர்:

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார்.

    சி.பி.எம். மாவட்ட செயலாளர் தயாநிதி, மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாநிலத் துணைச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் பயிர்சேதங்களுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மலைவாழ் மக்களுக்கு வங்கிகளில் மானிய உதவியுடன் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.

    ×