என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை அகழியில் இருந்து மீட்கப்பட்ட முதியவர் பிணம்.
கோட்டை அகழியில் முதியவர் பிணம் மீட்பு
- யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை
- முதியவர்கள் யாராவது மாயமானார்களா என விசாரணை
வேலூர்:
வேலூர் கொணவட்டம் சாலையில், கோட்டை அகழியின் மேல் மீன் விற்பனை செய்யும் நிலையம் உள்ளது.
மீன் விற்பனை நிலையம் அருகே அகழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக மிதந்தார். இதை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் அகழியில் இருந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் முதியவர்கள் யாராவது மாயமானார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் இன்று காலை கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






