என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elderly dead body recovery"

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சாலை நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மது போதையில் மயங்கிய நிலையில் இருப்பதாக எண்ணி அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர்.

    ஆனால் அவர் எந்த அசைவும் இன்றி இறந்து கிடந்தார். பின்னர் இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை
    • முதியவர்கள் யாராவது மாயமானார்களா என விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் சாலையில், கோட்டை அகழியின் மேல் மீன் விற்பனை செய்யும் நிலையம் உள்ளது.

    மீன் விற்பனை நிலையம் அருகே அகழியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக மிதந்தார். இதை கண்ட பொதுமக்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் அகழியில் இருந்து முதியவர் பிணத்தை மீட்டனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் முதியவர்கள் யாராவது மாயமானார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் இன்று காலை கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×