என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா
- ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறை ஊராட்சியில் உள்ள அ.கட்டுபடி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து காணப்பட்டது. குண்டும், குழியுமாக கிடந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி சாலை அமைக்க ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், வேலாயுதம், துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி துணை தலைவர் தென்போஸ்கோ வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.






