என் மலர்
நீங்கள் தேடியது "டாக்டர் திடீர் சாவு"
- பயிற்சிக்கு வந்த போது பரிதாப சம்பவம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருச்சி மாவட்டம் உறையூர் லாவண்யா அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர். திலீப் (வயது 31). டாக்டரான இவர் தியாக துருகத்தில் தனியாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.
வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் ஒரு வார பயிற்சிக்காக கடந்த 28-ந தேதி வேலூருக்கு வந்தார்.
சத்துவாச்சாரி ஆர்டிஓ ரோட்டில் உள்ள சி.எம்.சி விடுதியில் அறை எடுத்து தங்கினார். விடுதி அறைக்கு சென்ற திலீப் 2 நாட்களாகியும் அறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திலீப் தரையில் விழுந்து கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






