என் மலர்tooltip icon

    வேலூர்

    • பச்சை நிற லூங்கி கட்டி இருந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடிக்கும் கண்ணமங்கலம் இடையில் நேற்று இரவு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்ததாக காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் காட்பாடி ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது ெரயில் மோதி இறந்து கிடந்தவர் கட்டம் போட்ட சட்டையும் பச்சை நிறம் லூங்கி கட்டி இருந்தார்.

    இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இறந்தவர் பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அடுக்க ம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாட்ஸ்அப் எண் மூலமாக தெரிவித்தனர்
    • வேலுார் நகரபகுதியில் மட்டும் 179 புகார்கள் வந்துள்ளன

    வேலூர்:

    இன்றைய நவீன காலத்தில் செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. செல்போனில் போன் நம்பர்கள் தவிர வங்கி விவரங்கள், தனிப்பட்ட தகவல்களும் பதிவு செய்து வைக்கப்ப டுகிறது.

    மேலும் செல்போனை தவறவிடுவது, திருடு போவது, பறித்து செல்வது போன்ற சம்பவங்களும் நாள்தோறும் தொடர்கிறது.

    ஆரம்ப காலங்களில் செல்போன் தவறினால் அதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.ஆனால் ஸ்மார்ட் போன் வந்த பிறகு அதை "லாக்" செய்வதும் கண்டுபிடிப்பதும் எளிது என்ற போதிலும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் பரவலாக நடக்கிறது.

    இதைத் தடுக்க பல புதிய முயற்சிகளை சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட போலீசார் புதியதாக 'வாட்ஸ் ஆப்'எண்ணை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தனர்.

    செல்போன் தொலைந்தாலோ, பறிகொடுத்தாலோ உடனடியாக '94862 14166' எனும் வாட்ஸ்ஆப் எண் ணில் 'ஹாய்' என பதிவிட் டால், அதற்கான புகார் தரும் விவரம் அனுப்பப்படும். இதன் மூலம் செல்போன் மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கலாம்.உடனடியாக அது தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் விசாரணை தொடங்கப்படும்.

    இதன் மூலம் விசாரணை துரிதமாக நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த புதிய வசதி வெளியான மறு நாளான நேற்று மட்டும், வேலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 588 புகார்கள், இந்த "வாட்ஸ்ஆப் " எண் மூலமாக பதிவாகியுள்ளது. இதில், வேலுார் நகரபகுதியில் மட்டும் 179 புகார்கள் வந்துள்ளன.

    அதேநேரம், செல்போன் தவறவிட்டதாக, ஒரேநா ளில் 588 புகார்கள் வந்தி ருப்பது போலீசாரை அதிர்ச் சியடைய செய்துள்ளது.

    • 2 பேர் கைது
    • வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா போலீசார் நேற்று இறைவன்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் இறைவன்காடு பகுதியை சேர்ந்த திருவேங்கடம் (வயது 48), கல்லாங்குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன் (45) என்பதும், இவர்கள் அனுமதி இன்றி மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    2 பேரையும் கைது செய்த போலீசார், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
    • கட்டண கழிப்பறைக்கு செல்லும் குழாய் இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி இன்று காலை திடீரென புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது சென்னை பஸ் நிறுத்தம் இடத்தில் உள்ள கட்டண கழிப்பறை குடிநீர் தொட்டியில் தொடர்ந்து பஸ் செல்லும் சாலையில் தண்ணீர் வெளியேறி கொண்டு இருந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் பாசிப்படைந்து துர்நாற்றம் வீசியது. இதனைக் கண்ட கமிஷனர் ரத்தினசாமி பாசி படிந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

    கட்டண கழிப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கட்டண கழிப்பறைக்கு செல்லும் குழாய் இணைப்புகளை துண்டிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் புதிய பஸ் நிலையம் முழுவதும் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிறுநீர் கழிப்பதால் சிறுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனை சுத்தம் செய்யும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது 4-வது மண்டல உதவி கமிஷனர் சுப்பையா, உதவி பொறியாளர் சீனிவாசன், சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஒரு மாதத்திற்கு மேலாகியும் கால்வாய் அமைக்கும் பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டது
    • காட்பாடி- சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது

    வேலூர்:

    காட்பாடியில் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கால்வாய் பணி காட்பாடி அடுத்த கல்புதூர்-வண்றந்தாங்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.

    முதல்கட்டமாக கால்வாய் தடுப்பு கட்ட, கம்பி கட்டும் பணி மட்டும் மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதத்திற்கு மேலாகியும் கால்வாய் அமைக்கும் பணி தொடராமல், கிடப்பில் போடப்பட்டது.

    கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தால் தெருவின் அகலம் சுருங்கிபோனது. இதனால் வண்றந்தாங்கல் கிராமத்திற்கு அந்த வழியாக சென்றுவந்த அரசு பஸ் போக்குவரத்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதோடு, வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.

    வண்றந்தாங்கல், குளக்கரை தெரு, பஜனை கோவில் தெரு, திருவேங்கிட முதலியார் தெரு மற்றம் திருவேங்கிடம் முதலியார் சந்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், நீண்ட தொலைவு சுற்றிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்லும் அவல நிலையும் நீடித்து வருகிறது. சாலை மறியல்

    கால்வாய் கட்டப்படும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தை தாண்டி வீட்டிற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பாதுகாப்பின்றி ஆபத்தான நிலையில் இருக்கும் பள்ளம் மற்றும் தடுப்பு சுவர் அமைக்க நிற்க வைக்கப்பட்டுள்ள கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காட்பாடி-சித்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி, சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரசம் பேசினர்.

    மேலும் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காட்பாடி-சித்தூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது.

    • ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தியை முதலில் அனுப்ப வேண்டும்
    • விவரங்களை பதிவு செய்தால் படிவம் நேரடியாக மாவட்ட சைபர் குற்றப்பிரிவுக்கு சென்றுவிடும்

    வேலூர்:

    வேலூர் வேலூர் மாவட்டத்தில் செல்போன் திருட்டு போனாலோ அல்லது தொலைந்துபோனால் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கும் வகையில் 'செல் டிராக்கர்' என்ற புதிய வாட்ஸ்-அப் எண்ணை டி.ஐ.ஜி. முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

    வேலூர் மாவட்டத்தில் செல் போன் தொலைந்தவர்கள் போலீஸ் நிலையம் அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளிக்கும் நடைமுறையில் உள்ளது.

    இதை எளிமைாக்கும் வகையில் வீட்டில் இருந்தபடியே புகார் அளிக்கும் புதிய நடைமுறையாக 'செல் டிராக்கர்' என்ற வாட்ஸ்- அப் எண் அறிமுகம் செய்ய ப்பட்டு ள்ளது.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வாட்ஸ்-அப் எண்ணை டி.ஐ.ஜி. முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

    அப்போது உடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 94862-14166 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு செல் போனை தொலைத்தவர்கள் 'ஹாய்' என்று குறுஞ்செய்தியை முதலில் அனுப்ப வேண்டும்.

    உடனடியாக அந்த எண்ணுக்கு கூகுள் படிவம் இணைப்பு அனுப்பப்படும். அந்த படிவத்தில் செல்போன் தொலைத்தவர்களின் பெயர், முகவரி, தொலைந்துபோன செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண் உள்ளிட்ட விவர ங்களை பதிவு செய்தால் அந்த படிவம் நேரடியாக மாவட்ட சைபர் குற்றப்பி ரிவுக்கு சென்றுவிடும்.

    அதன்பிறகு சைபர் குற்றப்பிரிவு போலீசார் அந்த செல்போனை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

    இதன்மூலம் செல்போன் தொலைத்தவர்கள் அலைச்சல் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அணைக்கட்டு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது

    அணைக்கட்டு:

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மொனவூர், மேல்மொனவூர், தெள்ளூர், அத்தியூர், ஊசூர், பூதூர், போன்ற ஊராட்சிகளில் புதிய திட்டங்களை தொடங்கவும் மேலும் பணிகளை நிறைவடைந்துள்ள புதிய கட்டிடங்களையும், கட்டி முடிக்கப்பட்ட மேல் நீர் தேக்க தொட்டி திறப்பு விழாவும் நேற்று ஏ.பி. நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இதில் சுமார் ரூ.5 கோடியே 60 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள புதிய திட்டப் பணிகளும் தொடங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போது அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் பி.டி.ஓ. வின்சென்ட் ரமேஷ் பாபு, அத்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர், விற்பவர் மற்றும் கடத்துபவர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி, அப்புக்கல் மற்றும் கூனம்பட்டி ஆகிய மலைப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு சம்பந்தமாக நடத்தப்பட்ட சோதனையில் மொத்தமாக சுமார் 22,700 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், சுமார் 4,687 லிட்டர் கள்ளச்சாராயம், 16 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    எதிரிகள் மீது 14 கள்ளச்சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    காட்பாடி விரிஞ்சிபுரம் பேரணாம்பட்டு பொன்னை போலீஸ் நிலைய பகுதிகளில் நடத்திய சோதனையில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • 6-ந்தேதி கும்பாபிஷேகம்
    • நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடைபெற்றது

    வேலூர்:

    வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர், அய்யப்பன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது.

    இந்த கோவிலில் உள்ள பழனி ஆண்டவர், ஐயப்பன் ஸ்ரீ ராமர் காசி விஸ்வநாதர் சனி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகள் புதுப்பிக்கப்ப ட்டுள்ளன.

    கும்பாபிஷே கத்தையொட்டி இன்று காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடைபெற்றது.

    நாளை தன பூஜை மகாலட்சுமி யாகம், 5-ந் தேதி 2-ம் கால யாக பூஜைகள் நடக்கிறது. 6-ந் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 9. 45 மணிக்கு கோவிலில் மகா கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது.

    இதில் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், தேவ பிரகாஷ் ஆனந்த சாமிகள்ஆகியோர் கலந்து கொண்டு அருளாசி வழங்குகின்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா, முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், கவுன்சிலர் சந்திரசேகரன், மம்தா குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய நிர்வாகிகள் ஸ்ரீ வீரபத்திர சுவாமி நிர்வாக அறக்கட்டளை ஸ்ரீ பம்பாவாசன் பக்த சபையினர் , சைதாப்பேட்டை வாசிகள் செய்து வருகின்றனர்.

    • பணிக்கு சென்றபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம் பெருமாள் நகரை சேர்ந்தவர் வேலு (வயது 74). இவரது மகள் நிவேதா (34) ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    தினமும் நிவேதாவை அவரது தந்தை வேலு தனது பைக்கில் புதிய பஸ் நிலையம் அழைத்துச் சென்று விடுவார்.

    அங்கிருந்து பஸ் மூலம் பள்ளிக்கு நிவேதா சென்று வந்தார். இன்று காலை வேலு தனது பைக்கில் நிவேதாவை அழைத்துக்கொண்டு வேலூர் நோக்கி சென்றார்.

    கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி பைக் மீது உரசியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த நிவேதா மீது பின் சக்கரம் ஏறி இறங்கியது.

    இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வேலு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது.

    தகவல் அறிந்த வடக்கு போலீசார் விரைந்து சென்று நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் கண்காணிப்பு கேமரா மூலம் தேடினர். ரத்தினகிரி பகுதியில் சென்ற லாரியை மடக்கி பிடித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பசுமை சாலை பாலைவனமவதாக புகார்
    • வாகனங்களை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு

    அணைக்கட்டு:

    வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சலையின் இருபுறமும் பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சியாகவும் காற்றோட்டம் நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்ற புளிய மரங்கள் இவை சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது.

    தற்போது சாலை விரிவாக்கம் பணியல் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கி விட்டு கூடுதலாக மரங்களை வெட்டி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றன.

    இதனால் அதிகமான மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலையில் தற்போது வெயில் மட்டுமே சுட்டெரிக்கிறது. இதனால் அவ்வளியாக செல்லும் வாகன் ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளகி வருகின்றனர்.

    மேலும் மரங்களை வெட்டும் போது அவ்வழியாக செல்லும் வாகனங்களை சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை காத்திருக்க வைப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே அனுமதி வழங்கிய மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் வெட்ட வேண்டும் பசுமையாக இருக்கும் சாலையை பாலைவனமாக மாற்ற வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.

    அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.

    கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். 

    ×