என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்நிலையத்தில் துர்நாற்றம்"

    • மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
    • கட்டண கழிப்பறைக்கு செல்லும் குழாய் இணைப்புகளை துண்டிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி இன்று காலை திடீரென புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    அப்போது சென்னை பஸ் நிறுத்தம் இடத்தில் உள்ள கட்டண கழிப்பறை குடிநீர் தொட்டியில் தொடர்ந்து பஸ் செல்லும் சாலையில் தண்ணீர் வெளியேறி கொண்டு இருந்தது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் பாசிப்படைந்து துர்நாற்றம் வீசியது. இதனைக் கண்ட கமிஷனர் ரத்தினசாமி பாசி படிந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

    கட்டண கழிப்பிடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கட்டண கழிப்பறைக்கு செல்லும் குழாய் இணைப்புகளை துண்டிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் புதிய பஸ் நிலையம் முழுவதும் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் புதிய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிறுநீர் கழிப்பதால் சிறுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இதனை சுத்தம் செய்யும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது 4-வது மண்டல உதவி கமிஷனர் சுப்பையா, உதவி பொறியாளர் சீனிவாசன், சுகாதார அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×