என் மலர்
நீங்கள் தேடியது "WhatsApp complaint"
- வாட்ஸ்அப் எண் மூலமாக தெரிவித்தனர்
- வேலுார் நகரபகுதியில் மட்டும் 179 புகார்கள் வந்துள்ளன
வேலூர்:
இன்றைய நவீன காலத்தில் செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளது. செல்போனில் போன் நம்பர்கள் தவிர வங்கி விவரங்கள், தனிப்பட்ட தகவல்களும் பதிவு செய்து வைக்கப்ப டுகிறது.
மேலும் செல்போனை தவறவிடுவது, திருடு போவது, பறித்து செல்வது போன்ற சம்பவங்களும் நாள்தோறும் தொடர்கிறது.
ஆரம்ப காலங்களில் செல்போன் தவறினால் அதை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.ஆனால் ஸ்மார்ட் போன் வந்த பிறகு அதை "லாக்" செய்வதும் கண்டுபிடிப்பதும் எளிது என்ற போதிலும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் பரவலாக நடக்கிறது.
இதைத் தடுக்க பல புதிய முயற்சிகளை சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்ட போலீசார் புதியதாக 'வாட்ஸ் ஆப்'எண்ணை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தனர்.
செல்போன் தொலைந்தாலோ, பறிகொடுத்தாலோ உடனடியாக '94862 14166' எனும் வாட்ஸ்ஆப் எண் ணில் 'ஹாய்' என பதிவிட் டால், அதற்கான புகார் தரும் விவரம் அனுப்பப்படும். இதன் மூலம் செல்போன் மாயமானது குறித்து தகவல் தெரிவிக்கலாம்.உடனடியாக அது தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் விசாரணை தொடங்கப்படும்.
இதன் மூலம் விசாரணை துரிதமாக நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த புதிய வசதி வெளியான மறு நாளான நேற்று மட்டும், வேலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 588 புகார்கள், இந்த "வாட்ஸ்ஆப் " எண் மூலமாக பதிவாகியுள்ளது. இதில், வேலுார் நகரபகுதியில் மட்டும் 179 புகார்கள் வந்துள்ளன.
அதேநேரம், செல்போன் தவறவிட்டதாக, ஒரேநா ளில் 588 புகார்கள் வந்தி ருப்பது போலீசாரை அதிர்ச் சியடைய செய்துள்ளது.






