என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mother and mother are fine"

    • டோலி கட்டி தூக்கி செல்ல மறுத்தார்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் நடவடிக்கை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அருகே உள்ள ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (22). தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சிவகாமி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் சிவகாமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

    சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.

    சிவகாமியை முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து நடை பயணமாக ஆஸ்பத்திரி செல்ல அழைத்து வந்தனர்.

    கர்ப்பிணி பெண் பிரசவ வலியோடு நடந்தார். தெள்ளை மலை கிராமம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.

    சுகப்பிரசவம்

    பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

    இதனை அடுத்து நேற்று மாலை 7 மணி அளவில் , தனியார் மருத்துவமனையில் இருந்த தாய் மற்றும் குழந்தை ஆகியோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    இரவு நேரம் என்பதால் சாலை வசதி இல்லாத கரடு, முரடான மலைப்பாதையில் பயணம் செய்ய முடியாத சூழல் நிலவியது.

    எனவே சிவகாமி மற்றும் குழந்தையுடன் அவரது குடும்பத்தினர் தெள்ளை மலை கிராமத்தில் உள்ள துத்திக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பாபு வீட்டில் இரவு தங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, கணியம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் தெள்ளை மலை கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்து குழந்தையுடன் தாய் சிவகாமியை, தாசில்தார் சென்ற ஜீப் மூலம் கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு தாய் சிவகாமி மற்றும் குழந்தைக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 2 பேரும் ஆரோக்கியமாக இருப்பதால் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு, கீழ்கொத்தூர், முத்துக்கு மரன் மலை, பீஞ்சமந்தை, ஜார்தான்கொள்ளை வழியாக முத்தன் குடிசை கிராமத்திற்கு தாயுடன் குழந்தையை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

    ×