என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும்.
    • ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்றது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    இந்த நிலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50-ன் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்றைய பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
    • திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி நாளை 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வரும் பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதனால் வருகிற பவுர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • வேலூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர்.
    • உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    செங்கம்:

    வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தக்காளி கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்தனர்.

    செங்கம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் 100 முதல் 120 ரூபாய் வரையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் உழவர் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் அனைத்து தரப்பட்ட மக்களும் தக்காளியின் விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்த 20 நாட்களுக்கு விலை ஏற்றமாகதான் இருக்கும் என வியாபாரிகள் கூறினர்.

    • 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
    • 3 மாதங்களில் பணி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அய்யன் தீர்த்தவாரி குளம் உள்ளது. இந்த குளம் 1860 ஆண்டு உருவாக்கப்பட்டது.

    இதனை 80 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த தன்னார்வ குழுவினர் புதுப்பித்தனர். பின்னர் குளம் ஆழமாக தூர்வாரப்பட்டு அதிகளவு நீர் தேக்கி வைக்கப்பட்டது.

    கடந்த 2016 பிப்ரவரி மாஹோதய அமாவாசையின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீராடினர். அப்போது நெரிசலில் சிக்கி 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதனையடுத்து குளத்தை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு பூட்டப்பட்டது.பக்தர்கள் செல்ல அனுமதியின்றி கோவில் பூசாரிகள் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இக்குளம் 3 ஏக்கர் பரப்பளவில் 4 பக்கமும் 30 படிகளுடன் உள்ளது.

    இந்நிலையில் குளத்தில் 15 அடி ஆழத்திற்கு வண்டல் மண் தேங்கியுள்ளது.

    மகா தீபத்தின் தேர்த்திருவிழா நடக்க உள்ள நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதன் பின் அடைப்பு மற்றும் சேதமடைந்த மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் சீரமைக்கப்படும்.இதனால்நகர்ப்புற பகுதியில் இருந்து வரும் மழைநீர் குளத்தில் வந்து சேரும்.

    குளத்தின் உடைந்த படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச் சுவர் ஆகியனவும் சரி செய்யப்பட்டு 3 மாதங்களில் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கோவில் குளம் தூர்வாரப்படும் பணியை கலெக்டர் முருகேஷ், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    • உதவி கலெக்டர் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு அருகே அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 95 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் 145 நரிக்குறவர்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது செய்யாறு சப் கலெக்டர் ஆர். அனாமிகா அரும்பருத்தி கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக நரிக்குறவர்களிடம் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அரும்பருத்தி நரிக்குறவர் காலணியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் 145 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கலைமதி ,கிராம நிர்வாக அலுவலர் முத்துராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உடல்நிலை சரியாகாததால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமம் ,இலுப்பை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), விவசாயி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 7.30மணி அளவில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார் . இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர்.

    அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் கோரிக்கையால் நடவடிக்கை

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வழூர், ஆரியாத்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் அவதிப்பட்டு வந்தனர். எனவே வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு அரசுப் பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் வந்தவாசியிலிருந்து வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடுக்கு புறநகர அரசுப் பஸ் இயக்கப்பட்டது.

    இதையொட்டி ஆரியாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். தி.மு.க. வந்தவாசி மத்திய ஒன்றியச் செயலர் ஆரியாதூர் பெருமாள் வரவேற்றார்.

    வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் கொடியசைத்து பஸ் சேவையை தொடக்கி வைத்தார்.

    வந்தவாசியிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் இந்தப் பஸ் வழூர், ஆரியாத்தூர் வழியாக இரும்பேடு கிராமத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு அதே கிராமங்கள் வழியாக வந்தவாசி வந்தடையும்.

    • இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது.
    • பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    அதன்படி பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி மறுநாள் 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் வரும் பவுர்ணமி குரு பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இதனால் வருகிற பவுர்ணமியின் போது திருவண்ணாமலைக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
    • மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    ஆனி மாத பவுர்ணமியானது நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது.

    திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனி மாத பவுர்ணமியை குரு பூர்ணிமா என வட இந்தியர்கள் கடைபிடித்து வருகின்றனர். இவர்களை போன்று ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வழிபடுகின்றனர். ஆனி மாத பவுர்ணமி என்பது வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குவதால், தமிழக பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கணித்துள்ளனர்.

    இதையொட்டி, அருணாசலேஸ்வரர் மற்றும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி தெற்கு ரெயில்வே துறை சார்பில் சென்னை கடற்கரை-வேலூர் மெமு ரெயில், தாம்பரம்-விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை-விழுப்புரம் வரை இயக்கப்படும் ரெயில்கள், திருவண்ணாமலைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்குத் தொடங்குகிறது
    • கோயில் நிர்வாகம் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலப் பாதையில் மாத ம்தோ றும் பவுர்ணமி நாள்களில் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    இந்த நிலையில், ஆனி மாதப் பவுர்ணமி வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை மாலை 5.48 மணிக்கு முடிகிறது.

    இந்த குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 5 போலீசாரை கடித்து காயப்படுத்தினார்
    • மரத்தில் கட்டி வைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் தங்கி உள்ளனர்.

    கிரிவலப்பாதையில் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இரவு, பகல் நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். இரவு சுமார் 9.30 மணி அளவில் கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் அருகே கஞ்சா போதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் சுற்றி திரிந்தார்.

    கிரிவல பாதையில் நிர்வாணமாக நின்று தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதைக்கண்ட கிரிவலம் சென்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமியாரை பிடித்து சரமாரியாக தாக்கி அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் விரைந்து சென்று சாமியாரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பக்தர்கள் நாம சங்கீதம் பாடி வழிப்பட்டனர்
    • சொர்ண அலங்காரத்தில் அமர்ந்த கோலத்தில் கோவில் வளாகத்தில் பவனி வந்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் ஸ்ரீ ரகுமாயி தாயார் சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் கோவில் அமைந்துள்ளது. முன்னிட்டு தங்க தேரோட்டம் நடைபெற்றது. ஆஷாட ஏகாதேசியில் பக்தர்கள் நாம சங்கீதம் பாடி பாண்டுரங்கனை வழிப்பட்டனர்.

    முன்னதாக ரகுமாயி தாயாருக்கும் பாண்டு ரங்கருக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்த பின்பு அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில் பாண்டுரங்க சுவாமி தாயாருடன் சொர்ண அலங்காரத்தில் அமர்ந்த கோலத்தில் கோவில் வளாகத்தில் தங்க தேரோட்டம் பவனி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழந்து சென்றனர். 

    ×