மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி சாவு

உடல்நிலை சரியாகாததால் விரக்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி சாவு
Published on

செய்யாறு:

செய்யாறு அடுத்த கோவிலூர் கிராமம் ,இலுப்பை தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), விவசாயி. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 7.30மணி அளவில் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார் . இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர்.

அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com