145 நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ்

உதவி கலெக்டர் வழங்கினார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
145 நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ்
Published on

செய்யாறு:

செய்யாறு அருகே அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 95 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் 145 நரிக்குறவர்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது செய்யாறு சப் கலெக்டர் ஆர். அனாமிகா அரும்பருத்தி கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக நரிக்குறவர்களிடம் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அரும்பருத்தி நரிக்குறவர் காலணியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் 145 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கலைமதி ,கிராம நிர்வாக அலுவலர் முத்துராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com