search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளம் 80 ஆண்டுக்கு பிறகு புதுப்பிப்பு
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் குளம் 80 ஆண்டுக்கு பிறகு புதுப்பிப்பு

    • 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்
    • 3 மாதங்களில் பணி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அய்யன் தீர்த்தவாரி குளம் உள்ளது. இந்த குளம் 1860 ஆண்டு உருவாக்கப்பட்டது.

    இதனை 80 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த தன்னார்வ குழுவினர் புதுப்பித்தனர். பின்னர் குளம் ஆழமாக தூர்வாரப்பட்டு அதிகளவு நீர் தேக்கி வைக்கப்பட்டது.

    கடந்த 2016 பிப்ரவரி மாஹோதய அமாவாசையின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீராடினர். அப்போது நெரிசலில் சிக்கி 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதனையடுத்து குளத்தை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு பூட்டப்பட்டது.பக்தர்கள் செல்ல அனுமதியின்றி கோவில் பூசாரிகள் மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

    இக்குளம் 3 ஏக்கர் பரப்பளவில் 4 பக்கமும் 30 படிகளுடன் உள்ளது.

    இந்நிலையில் குளத்தில் 15 அடி ஆழத்திற்கு வண்டல் மண் தேங்கியுள்ளது.

    மகா தீபத்தின் தேர்த்திருவிழா நடக்க உள்ள நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதன் பின் அடைப்பு மற்றும் சேதமடைந்த மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் சீரமைக்கப்படும்.இதனால்நகர்ப்புற பகுதியில் இருந்து வரும் மழைநீர் குளத்தில் வந்து சேரும்.

    குளத்தின் உடைந்த படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச் சுவர் ஆகியனவும் சரி செய்யப்பட்டு 3 மாதங்களில் பணிகள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் கோவில் குளம் தூர்வாரப்படும் பணியை கலெக்டர் முருகேஷ், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×