என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stand naked and scream"

    • 5 போலீசாரை கடித்து காயப்படுத்தினார்
    • மரத்தில் கட்டி வைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் தங்கி உள்ளனர்.

    கிரிவலப்பாதையில் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் இரவு, பகல் நேரங்களில் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். இரவு சுமார் 9.30 மணி அளவில் கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை கோவில் அருகே கஞ்சா போதையில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க சாமியார் ஒருவர் சுற்றி திரிந்தார்.

    கிரிவல பாதையில் நிர்வாணமாக நின்று தகாத வார்த்தைகள் பேசி ரகளையில் ஈடுபட்டார். இதைக்கண்ட கிரிவலம் சென்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமியாரை பிடித்து சரமாரியாக தாக்கி அங்கிருந்த மரத்தில் கட்டி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் விரைந்து சென்று சாமியாரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×