என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போக்குவரத்து விதிகளை மீறியதாக நடவடிக்கை
    • விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போளூர் டி.எஸ்.பி. குமார் மேற்பார்வையில் போளூர், கலசப்பாக்கம், கடலாடி, சேத்துப்பட்டு, ஜமுனாமுத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் இன்ஸ்பெக்டர்கள் ஜெயபிரகாஷ், ராமச்சந்திரன், லட்சுமிபதி, பிரபாவதி, சப்- இன்ஸ்பெக்டர்கள். சிவக்குமார், சீனிவாசன் மகாலிங்கம் ராஜ் ஜெய்குமார் சரவணன், மற்றும் போலீசார் ஆண்டு முழுவதும் வாகன தணிக்கை செய்தனர்.

    கடந்த 12 மாதங்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஒட்டிய 34 ஆயிரத்து 503 பேர் மீதும் கார் ஓட்டும் போது சீட்டு பெல்டு அணியாமல் இருந்ததாக 7ஆயிரத்து 677மீதும் செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டிய 7 ஆயிரத்து 581, பேர் மீதும் இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்த வழக்கில் 4 ஆயிரத்து 910 பேர் மீதும் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4 ஆயிரத்து 840 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் அதிகம்பாரம் ஏற்றி செல்லுதல், உரிமை இன்றி வாகனம் ஓட்டியது, போன்ற பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 65 ஆயிரத்து 350 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த தகவலை டி.எஸ்.பி. குமார் கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில்:-

    கடந்த ஆண்டு 39 திருட்டு வழக்குகளில் 31 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர், 177 பேர் காயம் அடைந்தனர் என்றார்.

    • அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகிறது
    • கோவில் நிர்வாகத்தினர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.

    கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் 7-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகின்றது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல்
    • வனத்துறையினர் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறி செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மகா தீபத்தின் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் மலை உச்சியில் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது தலைமையிலான வனத்துறையினர் மலை உச்சிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மலையில் கந்தாசிரமம் அருகில் வெளிநாட்டினர் 3 பேர் டிரோன் கேமரா மூலம் படம் பிடிப்பதைக் கண்டு அவர்களை மடக்கி பிடித்தனர்.

    இதில் ஒருவர் மட்டும் படம் பிடித்ததாகவும் மற்ற 2 பேர் வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கேமரா வைத்திருந்த நபரை மட்டும் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அவரிடம் இருந்து டிரோன் கேமரா, செல்போன், 360 டிகிரி படம் பிடிக்கக்கூடிய பிரத்யோக கேமரா மற்றும் படம் பிடிக்க வைத்திருந்த பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த சரேஜ் (வயது 34) என்பதும், அவர் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அருகே உள்ள அண்ணாமலை நகரில் தங்கியிருப்பது. தெரியவந்தது.

    தனக்கு மலை ஏற தடை விதித்து இருப்பது தெரியாது என்றும், தனது யூடியூப் ேசனலில் பதிவிடுவதற்காக படங்களை எடுத்ததாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர்.

    மலையின் உச்சியில் டிரோன் கேமரா மூலம் வெளிநாட்டவர் படம் பிடித்த சம்பவத்தினால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • டாக்டர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்
    • சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் கீழ்பள்ளிப்பட்டு கால்நடை மருத்துவர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார். சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • உத்திராயண புண்ணியகால கொடியேற்றமும் நடக்கிறது
    • பக்தர்களுக்கு மகா தீப மை வழங்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நாளை காலை 10 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நடராஜர் நாளை விடியற்காலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்பு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட தீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்பு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து மாடவீதி உலா நடைபெறும்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 10 நாள் விழா நாளை காலை 5.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சாமி சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் கொடியேற்று விழா நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து காலை மாலை இருவேளையும் சாமி மாட வீதி உலா நடைபெறுகின்றன.

    தொடர்ந்து 10ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 6:15 மணிக்கு அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி கொடுப்பார். தொடர்ந்து இரவு திருவூடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.26 மணிக்கு தொடங்கி மறுநாள் 7-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு நிறைவடைகின்றது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை
    • ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கினர்

    போளூர்:

    பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு அறிவித்தது ரூ.1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை ஒரு கிலோ மற்றும் முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க நேற்று முதல் போளூரில் 18 வார்டுகளில் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் விநியோகம் செய்தனர்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • பொருட்கள் இல்லாததால் ஜெர்கினை எடுத்துச் சென்ற கும்பல்

    செங்கம்:

    செங்கம் புதிய பஸ் நிலையம் பின்புறம் செந்தமிழ் நகர் போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளது. இந்தப் பகுதியில் அருணகிரி என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் திருவண்ணாமலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலைக்கு பணிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் அருணகிரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து உள்ளனர். அதில் நகை பணம் பொருட்கள் இல்லை. ஆனால் ஜெர்கின் மட்டும் இருந்தது.

    அதனை விட்டு வைக்காமல் கிடைத்த வரைக்கும் லாபம் என்று மர்மக்கொம்பன் அணிந்து வந்த பழைய ஜெர்கினை விட்டு விட்டு புதிய ஜெர்கினை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    • சண்டை விலக்க சென்றதால் ஆத்திரம்
    • போலீசார் விசாரனை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், கிரிதரன் பேட்டை, செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் கிஷோர் குமார் (வயது 20). தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வருகிறார்.

    இவரது நண்பர் சல்மான் என்பவருக்கும் அதே தெருவில் வசிக்கும் ரஞ்சித் (26) என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது கிஷோர் குமார் சண்டை வேண்டாம் என்று விலக்கி விட்டுள்ளார்.

    அன்று இரவு 7 மணி அளவில் ரஞ்சித் விறகு கட்டையுடன் கிஷோர் வீட்டுக்கு சென்று நீ யாருடா சண்டை விலக்கி விட என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், விறகு கட்டியாலே உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார்.

    இதுகுறித்து கிஷோர் குமார் செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரும்பு வெட்டிக் கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. இவரது மகன் அண்ணாதுரை (வயது 40), கூலி தொழிலாளி. அண்ணாதுரை அதே ஊரைச் சேர்ந்த மஞ்சுநாதன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் கடந்த 1-ந் தேதி கரும்பு வெட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பாம்பு கடித்து விட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் கள் உடனடியாக அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண் ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து மாரி போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
    • வாகனங்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவதமலை உள்ளது.

    இதன் உச்சியின் மீது மல்லிகாஜூவனேஸ்வரர் உடனுரை பிரம்பராம்பிக்கை தாயார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பருவதமலை மீது ஏறி செல்லும் வழியில் ஏனி படி, கடப்பாறை நெட், தண்டவாளம் பாதை, தொங்கு பாலம் போன்றவற்றை பக்தர்கள் கடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள மலைக் கோவில்களில் 5 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதியில் பருவதமலையும், போளூர் தொகுதியில் லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவில் என இரண்டு கோவில்களுக்கு மலை உச்சிக்கு செல்ல பாதை அமைக்கும் பணி உட்பட 5 கோவில்களுக்கும் சேர்த்து ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

    அதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப்படுவதற்காக சில நாட்களுக்கு முன்பு சென்னை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயற்பொறியாளர் அன்பரசன் உட்பட பலர் பருவத மலையை ஆய்வு செய்வதற்காக வந்திருந்தனர்.

    அப்போது உடன் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் பருவதமலைக்குச் சென்று பச்சையம்மன் கோவிலில் இருந்து வீரபத்திரன் கோவில் மற்றும் மலையேறும் பாதையில் பாதி தூரம் வரை சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து நேற்று நவீன கேமராக்களை கொண்டு 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவத மலையை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து மலைக்கு மேலே செல்வதற்கு மாற்று பாதை அமைக்கும் பணி தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
    • கோவில் நிர்வாகிகள் தகவல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.

    இதைமுன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, 5 மணியளவில் 5½ அடி உயர ஸ்ரீநடராஜருக்கு அபிஷேகம், ஆராதனையும், காலை 7 மணியளவில் கோபுர தரிசனமும், பின்னர் பக்தர்களுக்கு ஆருத்ரா தீப மை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

    மாலை 6 மணியளவில் ஸ்ரீநடராஜர் சிவகாமசுந்தரி அம்மனுடன், 63 நாயன்மார்கள், சந்தான குறவர்கள் தனித்தனியே சப்பரத்தில் வீதி உலா சிவகான பேரிகை முழங்க நடைபெறும் என கோவில் விழாக்குழு நிர்வாகிகள் கூறினர்.

    ×