என் மலர்
திருவண்ணாமலை
- வியாபாரிகள் ஆன்லைனில் கொள்முதல்
- ஈரப்பதமின்றி உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதல் விலை கிடைக்கும் என கண்காணிப்பாளர் தகவல்
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 20 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் போளூர் 2-வது இடம் பெற்றுள்ளது.
இங்கு தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விவசாயிகளின் விளைபொருளான நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு போளூர், கேளூர், செங்குணம், சனிக்குவாடி, உள்பட 40 கிராமங்களில் இருந்து தினசரி நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. நெல் மூட்டைகள் காஞ்சிபுரம், கலவை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, போன்ற ஊர்களில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு நெல் மூட்டைகளை ஆன்லைனில் கொள்முதல் செய்து வருகின்றனர்.
விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உடனே பணம் தங்கள் கணக்கில் வரவு வருவதாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று வரை 26 ஆயிரத்து நெல் மூட்டைகள் வந்து ரூ.4.25 கோடிக்கு விற்பனை ஆயின சன்னரக நெல் 75 கிலோ கொண்ட மூட்டைகள் 1க்கு ரூ.1,450 முதல் 2,000 வரையிலும், குண்டு ரகம் ரூ.1,300 முதல் 1,639 வரையிலும், கோ-51 ரகம் 1,280முதல் ரூ.1,549 வரையிலும் விற்பனை ஆயின.
மத்திய அரசின் மின்னனும் தேசிய வேளாண் சந்தை (இ.என்.ஏ.எம்) திட்டத்தின் கீழ் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது.
வியாபாரிகள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கின்றனர். இதனால் போளூரில் உள்ள 8 கிடங்குகளில் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்க மடைந்துள்ளன.
இடமில்லாமல் சுமார் 6 ஆயிரம் மூட்டைகள் களத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கண்காணிப்பாளர் என்.வெங்கடேசன் கூறியதாவது:-
விவசாயிகள் நெல் அறுவடை ஆனவுடன் ஈரப்பதமின்றி நன்கு உலர்த்திக்கொண்டு வந்தால் கூடுதலாக நல்ல விலை அவர்களுக்கு கிடைக்கும். என்று கூறி வருகின்றோம் என்றார்.
சமீபத்தில் இங்கு ஆய்வு செய்த முன்னாள் அமைச்சரும் போளூர் தொகுதி எம்.எல்.ஏ, -வுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நெல் சேமித்து வைக்க கிடங்கு கட்டித் தருவதாக உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் சம்பா பருவம் முடிந்து விவசாயிகள் அறுவடையில் மும்பரமாக ஈடுபட்டு வருவதால் மேலும் நெல் வரத்து அதிகரிக்கும் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்வார்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 61,260 நெல் மூட்டைகள் வந்தன. ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்துக்கு விற்பனை ஆயின.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பொதுமக்களுக்கு அன்னதானம்
செய்யாறு:
செய்யாறு டவுன், கொடநகர் 9-வது வார்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர்ஆ. மோகனவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்ஷார், கவுன்சிலர் ஞானமணி சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கொடநகர் பகுதியில் தி.மு.க. கொடியை ஏற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அப்பகுதியை சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், யூனியன் சேர்மன்கள் ராஜு, பாபு, நகர செயலாளர் கே.விஸ்வநாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், சங்கர், திராவிட முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அக்பர், சரஸ்வதி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது
- 80 பேர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் கொரால்பாக்கம், கிராமத்தில் சேத்துப்பட்டு, வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையம், மற்றும் கீழாநெல்லி வேளாண்மை அறிவியல் மையம், சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, உளுந்து பயிறு தொகுப்பு நிலை குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க முகாம் நடந்தது.
முகாமில் வம்பன 8 ரக உளுந்து விதை பயன்படுத்துதல், விதை நேர்த்தி, உயிர் உரங்களின் பயன்பாடு, பேசில்லாஸ் பயன்படுத்தும் முறை, உர மேலாண்மை, ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 80 விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் விவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
முகாமில் வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப விஞ்ஞானி சுரேஷ், தொழில்நுட்ப வல்லுநர் ஐஸ்வர்யா, உதவி வேளாண்மை அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார தொழில்நுட்ப அட்மா மேலாளர் சேகர், நன்றி கூறினார்.
- கலெக்டர் முருகேஷ் தகவல்
- மொத்தம் ரூ.61 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு விவசாய துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தொிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
டிரோன் கருவி பயிற்சி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியினை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி, சென்டர் பார் ஏரோஸ்பேஸ் ரிசர்ச் மூலமாக விவசாயத்துறையில் பயன்படுத்தும் டிரோன் கருவி பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
வளர்ந்த நாடுகளில் டிரோன் தொழில் நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உரங்களை விவசாய நிலங்களில் தெளித்து நடைமுறைப்படுத்தும் பணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகிறது.
இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களில் பூச்சி கொல்லி நோய் தாக்கப்பட்டால் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பளவில் 25 முதல் 30 ஏக்கர் வரை மருந்துகளை தெளித்து முடிக்க முடியும்.
ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மேலும் விவசாய பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
இப்பயிற்சியினை பெற 18 முதல் 45 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களும், கல்வித் தகுதியில் 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பாஸ்போர்ட் உரிமை மற்றும் மருத்துவரின் உடல்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 10 நாட்கள் ஆகும். இப்பயிற்சியானது கல்வி வளாகம் மற்றும் விவசாய நிலத்தில் 10 நாட்கள் அளிக்கப்படும்.
பயிற்சிக்கான மொத்த தொகை ரூ.61 ஆயிரத்து 100 தாட்கோவால் வழங்கப்படும். இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட டிரோன் ரிமோட் பைலட் உரிமத்தினை பெறுவார்கள். மேலும் இந்த உரிமை 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாகும்.
இப்பயிற்சியினை பெற்றவர்கள் சொந்தமாகவோ அல்லது தாட்கோ நிதியுதவி மூலமாகவோ டிரோன் கருவிகளை வாங்கலாம். உழவன் செயலி மூலம் தங்கள் சேவைகளை சந்தைப்படுத்தலாம்.
விவசாய டிரோன்கள் வாங்குவதற்கு வேளாண்மை துறையில் உள்ள மானியம் மற்றும் கடன் திட்டங்கள் மூலமாகவும் அல்லது தாட்கோவின் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க வழி வகை செய்யப்படும்.
இத்திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள் தாட்கோ இணையதளமான www.tahdco.com விண்ண ப்பிக்கலாம். தங்குமிடம், உணவும் இத்துறையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 2.26 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
நேற்று பகலில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மாலை 6 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அம்மணி அம்மன் கோபுர வாசலில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். பவுர்ணமி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4.20 மணி வரை இருந்ததால் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- பராமரிப்பு பணி நடக்கிறது
- செறப்பொறியாளர் அறிவிப்பு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராம ரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பா ளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால்நாய்க்கன்தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவலம் ரோடு, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென் மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம் பட்டு, கூடலூர், ரமணா ஆஸ்ரமம் மற்றும் சுற்றியுள்ள பகு திகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என திருவண் ணாமலை மின்வாரிய செயற் பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்து உள்ளார்.
- முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 46), முன்னாள் ராணுவ வீரர். இவர், கடந்த அக்டோபர் மாதம் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மாரிமுத்துவின் மனைவி கவிதா, அவரது கள்ளக்காதலன் செட்டித்தாங்கலை சேர்ந்த வேன் டிரைவர் சங்கர், சிறுமூர் பாபு என்கிற திருமாலன், அடையபுலம் பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 5 பேரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் கவிதாவை தவிர மற்ற 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து சங்கர், பாபு, பிரகாஷ்ராஜ், அப்பு ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
- பெரணமல்லூர் பகுதியில் நடந்தது
- பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
சேத்துப்பட்டு:
பெரணமலூர் ஊராட்சி ஒன்றியம் கெங்காபுரம், கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சிமெண்டு, சாலை மற்றும் கல்வெர்ட் அமைக்கும் பணி, பெரிய கொழப்பலூர், கிராமத்தில் பொது நிதியிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பள்ளி சீரமைப்பு பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் 21-22-ம் ஆண்டிற்கான ரூ.11 லட்ச மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில், பெரிய கொழப்லூர், கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சந்திரம்பாடி, கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கால்நடை துறை பராமரிப்பு சார்பில் தீவன வளர்ப்புகள், குளம் அமைத்தல், அரியபாடி, கிராமத்தில் இருளர் இன மக்கள் மேம்பாட்டு நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் வீதம் எட்டு பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளின் தன்மை, மற்றும் பணி நிலவரம், குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பெரிய கொழப்பலூர் கிராமத்தில் ஆவின் போதுஅரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு சிறப்பு வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவிகளிடம் நன்றாக படித்து வாழ்வில் நல்ல நிலைக்கு நீங்கள் வரவேண்டும். படிப்பில் கவனம் செலுத்துங்கள். என்று கூறினார்.
- சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
செய்யாறு :
செய்யாறு டவுன், திருவத்திபுரத்தில் அமைந்துள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் பாலகுஜாம்பிகை உடனாய வேதபுரீஸ்வரர் கோவிலில் இன்று காலை ஆருத்ரா தரிசனத்தை காண பக்தர்கள் பெருமளவில் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமிகளுக்கு மலர் அலங்காரம் செய்திருந்தனர். கடும் பனிப்பொழிவு இருந்தாலும் பக்தர்கள் ஆருத்ரா தரிசனத்தைக்கான ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று செய்யாறு அருகே உள்ள வட தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள தவமுலை நாயகி உடனாய தண்டல புரீஸ்வரர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியொட்டி நடராஜர் உற்சவர் சிலைக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற விசேஷ பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பஞ்சலோக ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இந்த ஆருத்ரா தரிசனத்தை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜப் பெருமானை தரிசித்து சென்றனர்.
- மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவி- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பரணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அறிவியல் பாடங்கள் சம்பந்தமாக மாணவிகளுக்கு பாடங்கள் குறித்த விளக்கம் அளிக்கவும் செய்முறை தேர்வு குறித்து பயிற்சி அளிக்கவும் தனியாக வாட்ஸ்அப் குழு அமைத்துள்ளார்.
இந்த குழுவில் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் உள்ளனர்.
இந்த வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மாணவிகள் சில பேருக்கு ஆசிரியர் பரணி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் வீடியோ காலில் வரும்படி அச்சுறுத்தியுள்ளார்.
மாணவிகளிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் அவரது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இன்று காலை சாலவேடு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வந்தனர். பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் பரணியை அவர்கள் திடீரென தாக்கினர். அங்கிருந்தவர்கள் ஆசிரியரை மீட்டனர்.
மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் ஆசிரியர் பரணியை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.
- உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.
இதனை முன்னிட்டு அதிகாலை 3 மணி அளவில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்.
அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதை தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கியது.
இதனை முன்னிட்டு இன்று காலை சாமி சன்னதி முன்பு தங்க கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து காலை, மாலை இருவேளையும் மாட வீதியில் சாமி ஊர்வலம் நடைபெறும்.
தொடர்ந்து 10ஆம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று காலை 6.15 மணிக்கு அண்ணாமலையார் ராஜகோபுரம் அருகே உள்ள திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சி கொடுப்பார். தொடர்ந்து இரவு திருவூடல் நிகழ்ச்சியும் நடைபெறும்.
- சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சி கூட்டரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி. கலந்துகொண்டு கர்ப்பிணி களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரபியுல்லா, பி.பி.முருகன், வட்டார மருத்துவ அலுவலர் பூங்குழலி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயந்தி, சரஸ்வதி உள்பட மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், வந்தவாசி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் மருதாடு, கடைசிகுளம், கல்லாங்குத்து, வழூர், கீழ்கொடுங்காலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 106 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவு ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவுக்கு மாவட்ட திட்ட அலுவலர் பா.கந்தன் தலைமை தாங்கினார். சென்னாவரம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.வீரராகவன், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கம் மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார திட்ட அலுவலர் கே.அபிராமி வரவேற்றார்.
திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணி வேந்தன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல். ஏ. கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
விழாவில் நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், தி.மு.க. ஒன்றியச் செயலா ளர்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






