என் மலர்
திருவண்ணாமலை
- சாலையை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த தூசி நத்த கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 80). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வந்தவாசி- காஞ்சிபுரம் மெயின் ரோட்டை கடந்து சென்றார்.
அப்போது எதிரே வந்த லாரி இவர் மீது மோதியது இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அங்கு உள்ளவர்கள் முருகேசனை மீட்டு ஆம்புலன்சில் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார். இதுகுறித்து தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது
- தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்து வரப்பட்டதாக தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன.
கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது. இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு வருவதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நித்யானந்தாவின் 46-வது அவதார தின தொடர் கொண்டாட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நடைபெற்று வருகின்றது.
இதையொட்டி கடந்த 6-ந்தேதி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா நாளை வரை கொண்டாப்பட உள்ளது.
இந்த நிலையில் நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு லாரியில் தேர் பீடம் கொண்டு வரப்பட்டது. அதனை கிரேன் உதவியுடன் லாரியில் இருந்து இறக்கி ஆசிரமத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.
இந்த தேர் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும், அவதார தின விழா நிறைவின் போது கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆசிரமத்தின் அருகில் இருந்த சிடர்களிடம் கேட்ட போது, பல்வேறு கோவில்களில் தேரோட்டடம் நடத்தப்படாமல் உள்ளதால் தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தேர் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
திடீரென நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு தேர் கொண்டு வரப்பட்ட தகவல் கிரிவலப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தனிப்படை தீவிரம்
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு துப்பு துலக்கினர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), திருவண்ணாமலை திருவூடல் தெருவில் தையல் கடை நடத்தி வந்தார்.
தாமரை நகரில் ேநற்று முன்தினம் இரவு சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வெட்டி கொைல செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டராம்பட்டு சாலை வழியாக சென்றது தெரியவந்தது.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகினறனர்.
- போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சாமியார் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
கிரிவலம் செல்லும் பக்தர்களின் முன்னிலையில் விற்கப்படுவதாகவும் கூறப்படும் நிலையில் இன்று சாமியார் ஒருவர் கஞ்சா போதை தலைக்கேறி அங்கிருந்து நடைபாதை கடைகளை அடித்து நொறுக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பிடித்து கை, கால்களை கட்டிபோட்டனர்.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர் பொதுமக்களையும் கிரிவலம் செல்லும் பக்தர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கிரிவலப் பாதையில் கஞ்சா விற்பனைகளை கட்டி வருவதாகவும் மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா போதை தலைக்கேறிய லாரி டிரைவர்ஒருவர் ஆடைகளை கலைந்து கிரிவலம் செல்லும் பக்தர்கள் முன் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் தற்போது சாமியார் ஒருவர் போதையில் கடைகளை அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 25).
இவர், 17 வயது இளம் பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து இளம்பெண் நேற்று திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியம், வீரம்பாக்கம் புதூரில் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அனுக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளரும், செய்யாறு சர்க்கரை ஆலை இயக்குனருமான எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் ஒ. ஜோதி எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜி, நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், திராவிட முருகன், சங்கர், ரவிக்குமார், திமுக நிர்வாகிகள் புரிசை சிவக்குமார், செய்யாமூர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ‘தீப மை’ தரப்படும் என்று அறிவிப்பு
- யாரும் நம்ப வேண்டாம் என இணை ஆணையர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 6-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
தீப 'மை'
இந்த மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள், அதாவது கடந்த 16-ந்தேதி வரை மலை உச்சியில் காட்சி அளித்தது. மறுநாள் அதிகாலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை கோவில் ஊழியர்களால் மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது கோவில் நிர்வாகம் மூலம் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய தயார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் மூலம் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு தீப 'மை' திலகமிட்டது. இதையடுத்து கோவிலில் தீப 'மை' பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.
போலி பேஸ்புக் கணக்கு
இந்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் திருஅண்ணாமலை யார்கோவில் என்ற பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி தீப 'மை' வேண்டு வோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழு விலா சத்தை இன்பாக்ஸில்மெசேஜ் செய்யுங்கள், உங்களுக்கு கூரி யர் மூலம் அனுப்பி வைக்கி றோம் என்று தீப 'மை' புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இதில் பலர் அவர்களது விலாசத்தை பதிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் அசோக் குமாரிடம் கேட்ட போது, முகநூல் பதிவிற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த வித மான தொடர்பும் இல்லை. கோவில் நிர்வாகம் மூலம் தபால் துறை மூலமாக மட் டுமே தீப 'மை' பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டு வரு கிறது. யாரோ பணம் சம்பா திக்கும் நோக்கில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் பரப்பப் படும் இதுபோன்ற தகவல் களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண் டாம்' என்றார்.
கோவில் பெயரில் போலி யான முகநூல் கணக்கை உரு வாக்கி பக்தர்களிடமும். பொதுமக்களிடமும் பணத்தை கொள்ளையடிக் கும் மர்ம நபர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கேமரா காட்சிகள் ஆய்வு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் திருவண்ணாமலையில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இரவு 9.30 மணிளவில் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். தாமரை நகர் பகுதியில் உள்ள ஹவு சிங் போர்டு அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மர்ம கும்பல் ஆறுமுகத்தை தடுத்து நிறுத்தி சரமாரியாக வெட்டினர். இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன் விரோத தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்
- போலீசார் விசாரணை
தண்டராம்பட்டு:
தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே சே.ஆண்டப் பட்டு கிராமத்தில் உள்ள ரைஸ்மில் தெருவில் வசித்து வருப வர் சக்திவேல் (வயது 45), கூலித்தொழிலாளி.
இவரது 2-வது மகள் சந்தியா தானிப்பாடி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சந்தியா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தியா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தானிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்
- மசூதி நிர்வாகத்தின் கோரிக்கை அடிப்படையில் ஏற்பாடு
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம், எர்ணாமங்கலம், கடலாடி, கீழ்ப்பாலூர், வீரளூர், கேட்டவர்பாளையம், மோட்டூர், வன்னியனூர், காந்தபாளையம், தொப்பனந்தல் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள காரப்பட்டு, காஞ்சி, ஆலத்தூர், இறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள மசூதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வந்தது.
இதனை எம்எல்ஏ சரவணனிடம் சரி செய்து கொடுக்கும்படி மசூதி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் சரவணன் எம்.எல்.ஏ. பேசினார்.
அதன் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலசப்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் அனைத்து மசுதிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டு அடிப்படை வசதிகள் நிறைவேற்றி கொடுக்கப்படும் என தெரிவித்துச் சென்றார். இந்நிலையில் நேற்று மசூதிக்கு சரவணன் எம்.எல்.ஏ. தலைமையில் கலசப்பாக்கம், கடலாடி, கீழ்பாலூர், எர்ணாமங்கலம், வீரலூர், காரப்பட்டு, காஞ்சி, இறையூர் ஆகிய 8 மசூதிகளுக்கு ரூ.57 லட்சம் நிதியை மசூதி நிர்வாகிகளிடம் சிறுபான்மை துறை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
மேலும் விடுபட்டுள்ள மசூதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் ஆய்வு மேற்கொண்டு மே மாதத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
- அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனர்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசியில் தனியார் நிதி நிறுவனம் தீபாவளி மற்றும் பொங்கல் சீட்டு நடத்தி மளிகை பொருட்கள், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், சீர்வரிசை சாமான்கள் உள்ளிட்டவை கவர்ச்சிகரமான பொருட்கள் தருவதாக பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல பேரிடம் கோடி கணக்கில் பணம் வசூல் செய்துள்ளனர்.
இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் வந்தவாசி ஆரணி சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்குண்டான பொருட்களை வாங்குவதற்காக நிதி நிறுவனத்திற்கு பொது மக்கள் சென்றுள்ளனர்.
அப்போது அதன் உரிமையாளர் அங்கு இல்லாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் செல்போன் மூலமும் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்காததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் திருவண்ணா மலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது சம்பந்தமாக போலீசார் வந்தவாசி ஆரணி சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று சிலர் சூப்பர் மார்க்கெட்டின் பக்கவாட்டில் உள்ள இரும்பு ஷட்டரை உடைத்து உள்ளே இருக்கும் மளிகை பொருட்கள் சாமான்கள் உள்ளிட்டவைகளை திருடிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த போலீசாரை கண்டதும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது அருகிலுள்ள கடைகளில் மளிகை பொருட்கள், பித்தளை சாமான்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட வை பதுக்கி வைத்தி ருந்தது தெரியவந்தது.
இதை யடுத்து தாசில்தார் முருகானந்தம் தலைமையில் போலீசார் பூட்டை உடைத்து பதுக்கி வைத்திருந்த பொருட்களை மீட்டு மீண்டும் சூப்பர் மார்க்கெ ட்டில் வைத்து சீல் வைத்தனர்.
சூப்பர் மார்க்கெட் கடைக்குள் புகுந்து கொ ள்ளைய டித்தவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.30.29 லட்சம் தள்ளுபடி
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி அடுத்த சம்புவராய நல்லூர் நடுக்குப்பம் சுற்றுவட்டார கிராமத்தில் 22 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் மூலம் 30 லட்சம் ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டு இருந்தன.
தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதன் அடிப்படையில் இந்த 30 லட்சத்து 29ஆயிரம் ரூபாய் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் தள்ளுபடியானது.
இந்த கடன் தள்ளுபடி அரசானை சான்றிதழை ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் தலைமையில் பயனா ளிகளுக்கு வழங்கினார்கள்.






