நித்யானந்தா ஆசிரமத்திற்கு லாரியில் வந்த தேர் பீடம்

பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்து வரப்பட்டதாக தகவல்
லாரியில் கொண்டுவரப்பட்ட தேர் பீடம்.
லாரியில் கொண்டுவரப்பட்ட தேர் பீடம்.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலப்பாதை உள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன.

கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் உள்ளது. இது தற்போது கைலாசாவின் தூதரகமாகவும் செயல்பட்டு வருவதாக அங்குள்ள அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நித்யானந்தாவின் 46-வது அவதார தின தொடர் கொண்டாட்டங்கள் கடந்த 3-ந்தேதி முதல் திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா பிடதி ஆசிரமத்தில் நடைபெற்று வருகின்றது.

இதையொட்டி கடந்த 6-ந்தேதி ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழா நாளை வரை கொண்டாப்பட உள்ளது.

இந்த நிலையில் நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு லாரியில் தேர் பீடம் கொண்டு வரப்பட்டது. அதனை கிரேன் உதவியுடன் லாரியில் இருந்து இறக்கி ஆசிரமத்திற்குள் கொண்டு செல்லப்பட்டது.

இந்த தேர் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்து கொண்டு வந்ததாகவும், அவதார தின விழா நிறைவின் போது கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆசிரமத்தின் அருகில் இருந்த சிடர்களிடம் கேட்ட போது, பல்வேறு கோவில்களில் தேரோட்டடம் நடத்தப்படாமல் உள்ளதால் தேரோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தேர் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

திடீரென நித்யானந்தா பிடதி ஆசிரமத்திற்கு தேர் கொண்டு வரப்பட்ட தகவல் கிரிவலப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com