search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taylor's murder"

    • கூலிப்படையை சேர்ந்த மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையம் அடுத்த சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). இவர் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரபாவதி, அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆறுமுகம் தையல் தொழில் மட்டுமின்றி பைனான்ஸ் மற்றும் ரியஸ் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார்.

    கடந்த 7-ந் தேதி இரவு சுமார் 10 மணியளவில் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து நல்லவ ன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தாமரை நகரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது குறித்து திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:-

    வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவருக்கு ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார்.

    கடன் வாங்கிய பரந்தாமன் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆறுமுகத்திற்கும், பரந்தாமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விரோதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த பரந்தாமன், ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து அவருக்கு தெரிந்த கலசப்பாக்கம் தாலுகா சாலையனூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் பாரதி (22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெரு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் தமிழரசன் (20), திருவண்ணாமலை குளத்து மேட்டு தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆகியோருக்கு பணம் கொடுத்து தையல் டெய்லர் ஆறுமுகத்தை கொலை செய்ய சதித்திட்டம் திட்டினார்.

    அதனைத் தொடர்ந்து பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகியோர் அவர்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 7-ந் தேதி இரவு ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தனர்.

    அதைத் தொடர்ந்து பரந்தாமன், பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் திருவண்ணா மலை டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த 3 பேரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • தனிப்படை தீவிரம்
    • கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு துப்பு துலக்கினர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52), திருவண்ணாமலை திருவூடல் தெருவில் தையல் கடை நடத்தி வந்தார்.

    தாமரை நகரில் ேநற்று முன்தினம் இரவு சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வெட்டி கொைல செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டராம்பட்டு சாலை வழியாக சென்றது தெரியவந்தது.

    கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகினறனர்.

    ×