என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • விபத்தில் சிக்கியவருக்கு நிவாரணம் வழங்காததால் நடவடிக்கை
    • கோர்ட்டில் ஒப்படைத்தனர்

    ஆரணி:

    கலசபாக்கம் அடுத்த அணியாலை கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 27) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு பஸ் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    இதனையடுத்து சம்பத் ஆரணி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பத் என்பவருக்கு ரூ.7லட்சத்து 54ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் ஆரணி நீதிமன்ற நீதிபதி தாவூத் அமால் உத்தரவு பிறப்பித்தார்.

    இதன் மேல்முறையீடு சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு 7லட்சத்து 54ஆயிரத்து 239 ரூபாய் வழங்கிட உத்தரவு பிறப்பிக்கபட்டது.

    நிவாரண தொகையை இதுவரையில் வழங்காத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று காலையில் ஆரணி பழைய பஸ் நிலையத்தில் 202 தடம் எண் கொண்ட அரசு பஸ்சை நீதிமன்ற அலுவலர் துரை தலைமையில் ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

    • 17-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் முருகேஷ் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தை வழங்கி அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதனையடுத்து இவ்விருதுக்காக கிராம ஊராட்சிகளை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வு குழுவினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலைமை வகிக்கும் ஒரு கிராம ஊராட்சி, ஒரு மகளிர் தலைமை வகிக்கும் கிராம ஊராட்சி, இதர சிறந்த கிராம ஊராட்சிகள் 3 என்ற விகிதத்தில் 5 ஊராட்சிகளை தேர்வு செய்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    அதன்படி சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தன்று உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதும் மற்றும் வரையறுக்கப்படாத நிதியாக ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

    எனவே இவ்விருதுக்கு tnrd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வருகிற 17-ந்தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பிக்க அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களும் கேட்டுகொள்ள ப்படுகிறார்கள்.

    இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • மரத்தில் பிணமாக தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    செய்யாறு அனப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி ராதா, இவர்களுக்கு மோனிஷ்கா என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் செய்யாறு சாலையில் தெள்ளூர் மலை கிராமம் அருகே காமராஜ் கருவேல மரத்தில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இன்று காலை அந்த வழியாக ஆடு மேய்ப்பவர்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கிடந்த உடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காமராஜ் உடலை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவண்ணாமலையில் பொதுமக்கள் மறியல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கல்நகர் சுடுகாடு பகுதியில் கஞ்சா போதையிலும், மதுபோதையிலும் அவ்வப்போது சிலர் இரவு நேரங்களில் வழிப்பறி மற்றும் தகராறில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் இரவு நேரங்களில் சென்றுவர அச்சப்படுகின்றனர்.

    கஞ்சா போதையில் வழிப்பறி

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று கல்நகர் சுடுகாடு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த முகல்புறா தெருவை சேர்ந்த நசீர் மற்றும் முன்னா ஆகியோரை போதையில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் தகராறில் ஈடுபட்ட நபர்களை அவர்கள் பிடிக்க முயன்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை அவர்கள் அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நபரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கம்மங்கொள்ளை தெரு, முகல்புறா தெரு, நபிநாயகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள், கல்நகர் சுடுகாடு அருகில் கஞ்சா, மது போதையில் சிலர் தகராறிலும், வழிப்பறியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் தற்போது தகராறில் ஈடுபட்டு தப்பியோடிய மற்ற நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மதியம் 1 மணி வரை தப்பியோடிய நபர்களை போலீசார் கைது செய்யாததை கண்டித்து கம்மங்கொள்ளை தெரு, முகல்புறா தெரு, நபிநாயகன் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கோபால் தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வந்து போலீசாருடன் இணைந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது தகராறு மற்றும் வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் போதையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க ரேசன் கடையில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இதில் அட்டை தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.

    இதில் வந்தவாசி நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், நகரச் செயலர் தயாளன், நகர்மன்ற உறுப்பினர் கிஷோர்குமார், கூட்டுறவு சங்கச் செயலர் காலேஷா, இளைஞர் அணி செயலாளர் கோமாதா சுரேஷ், நகர நிர்வாகி சி பி பாபு, நகர மன்ற உறுப்பினர்கள் சந்தோஷ், அன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பூட்டை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசபாக்கத்தை அடுத்த எர்ணாமங்கலம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 62), விவசாயி.

    இவர், நேற்று அதே பகுதியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்காக வீட்டை பூட்டிக்கொண்டு சென்றார்.

    வேலை முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.3 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

    இதுகுறித்து கலசபாக்கம் போலீசில் சேகர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்த சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி அருகே சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இ.பி.நகரில் தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் திமுக மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி ஒன்றிய சேர்மன் கனிமொழி சுந்தர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லலிதா சண்முக சுந்தரம், ஆகியோர் மாலை மற்றும் வலையல்களை அணிவித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் 350-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ.கள் சிவானந்தம் தயாநிதி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளை கணேசன், நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், துரைமாமது, கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், ஒன்றிய குழு துணை சேர்மன் ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித், வட்டார மருத்துவ அலுவலர்கள் எம்நாத், சுரேஷ், பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1200 பேருக்கு அன்ன கூடை வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு வெம்பாக்கம் மேற்கு, கிழக்கு, மத்திய, ஒன்றிய திமுக சார்பில் பெருங்கட்டூர் கிராமம், கலைஞர் திடலில் பொதுக் கூட்டம் மற்றும் நல திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்குஒ. ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து பேசினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜு, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பேராசிரியரின் கொள்கைகளையும், அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் 1200 அன்னக்கூடைகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏஅன்பழகன், லோகநாதன், ஆர். வெங்கடேஷ் பாபு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர், ஞானவேல், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அசோக், ஆர்.வி. பாஸ்கரன், சான்பாஷா, சிட்டிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் குப்புராஜ் நன்றி கூறினார்.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ஒன்னுபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). இவர் தனது நண்பர்களான சங்கர் (21), தனுஷ்( 19),மணிகண்டன் (20) ஆகியோருடன் ஒரே பைக்கில் வண்ணாங்குளம் நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தார்.

    வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் வரும்போது பஸ்சும், பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பைக்கில் வந்த 4 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பஸ்சின் சக்கரத்தில் பைக் சிக்கி சேதமடைந்தது.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் கட்டிட மேஸ்திரி. இவரது மகன் சக்திவேல் (வயது 19). அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் சக்திவேலுக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சக்திவேல் அருகில் உள்ள ஏரிக்குச் சென்று மீன்பிடிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 17 வயது சிறுவன் அங்கு வந்தார்.

    இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன் சக்திவேலை விறகு கட்டையால் அடித்து தாக்கினார்.

    இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வந்தவாசி டி.எஸ்.பி. கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கீழ்கொடுக்கானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த நெடுங்கலை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி அஞ்சலை (வயது 56). இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு புதூர்சென்று விட்டு இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது நெடுங்கல் அரசு பள்ளி எதிரே வேகமாக வந்த பைக் மோதியதில் அஞ்சலை பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அஞ்சலியை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

    டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தரிசனத்திற்கு 2 மணி நேரம் காத்திருந்தனர்
    • வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×