என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ்- பைக் விபத்து"

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த ஒன்னுபுரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 20). இவர் தனது நண்பர்களான சங்கர் (21), தனுஷ்( 19),மணிகண்டன் (20) ஆகியோருடன் ஒரே பைக்கில் வண்ணாங்குளம் நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தார்.

    வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் வரும்போது பஸ்சும், பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பைக்கில் வந்த 4 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பஸ்சின் சக்கரத்தில் பைக் சிக்கி சேதமடைந்தது.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×