என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி பேஸ்புக் கணக்கு"

    • ‘தீப மை’ தரப்படும் என்று அறிவிப்பு
    • யாரும் நம்ப வேண்டாம் என இணை ஆணையர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 6-ந்தேதி கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

    தீப 'மை'

    இந்த மகா தீபம் அன்றில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள், அதாவது கடந்த 16-ந்தேதி வரை மலை உச்சியில் காட்சி அளித்தது. மறுநாள் அதிகாலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை கோவில் ஊழியர்களால் மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது கோவில் நிர்வாகம் மூலம் பக்தர்களுக்கு வினியோகம் செய்ய தயார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் மூலம் ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு தீப 'மை' திலகமிட்டது. இதையடுத்து கோவிலில் தீப 'மை' பிரசாதம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    போலி பேஸ்புக் கணக்கு

    இந்த நிலையில் பேஸ்புக்கில் சிலர் திருஅண்ணாமலை யார்கோவில் என்ற பெயரில் போலியான கணக்குகளை உருவாக்கி தீப 'மை' வேண்டு வோர் தங்கள் செல்போன் எண் மற்றும் முழு விலா சத்தை இன்பாக்ஸில்மெசேஜ் செய்யுங்கள், உங்களுக்கு கூரி யர் மூலம் அனுப்பி வைக்கி றோம் என்று தீப 'மை' புகைப்படத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இதில் பலர் அவர்களது விலாசத்தை பதிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக கோவில் இணை ஆணையர் அசோக் குமாரிடம் கேட்ட போது, முகநூல் பதிவிற்கும் கோவில் நிர்வாகத்திற்கும் எந்த வித மான தொடர்பும் இல்லை. கோவில் நிர்வாகம் மூலம் தபால் துறை மூலமாக மட் டுமே தீப 'மை' பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டு வரு கிறது. யாரோ பணம் சம்பா திக்கும் நோக்கில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் பரப்பப் படும் இதுபோன்ற தகவல் களை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் யாரும் நம்ப வேண் டாம்' என்றார்.

    கோவில் பெயரில் போலி யான முகநூல் கணக்கை உரு வாக்கி பக்தர்களிடமும். பொதுமக்களிடமும் பணத்தை கொள்ளையடிக் கும் மர்ம நபர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பேஸ்புக் கில் பிரபலமானவர்கள் பெயரில் போலிக் கணக்கு உருவாக்கி மோசடி செய்து வருவது அதிகரித்து வருகிறது. ஒரு நபரின் புகைப்படத்தை எடுத்து போலிக் கணக்கை துவக்கி, அவர்களது நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்படுகிறது.

    அதனை உண்மையான கணக்காக நினைத்து நட்பு அழைப்பை ஏற்றால், சிறிது நேரத்தில் அவசரத் தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது என மெசேஜ் அனுப்பப்படுகிறது.

    ஒரே நேரத்தில் பலருக்கும் இதேபோல மெசேஜ் அனுப்பப்படுகிறது. சிலர் நேரடியாக கேட்க தயக்கப்பட்டு இப்படி கேட்பதாக எண்ணி, பணத்தை அனுப்பும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

    அதேசமயம் அது போலி கணக்கு என்பதை கண்டறிந்து கேள்வி கேட்டால், அந்தக் கணக்கு முடக்கப்படுகிறது. இப்படி மோசடி செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    பேஸ்புக்கில் பிரபலமாக இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பெயர்களில் இப்படி போலிக் கணக்குகள் துவங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவான ஏபி நந்தகுமார் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் அவருடைய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் இணையும்படி அழைப்பு விடுத்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனைக் கண்ட சிலர் நந்தகுமார் எம்.எல்.ஏ.வுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அது போன்று வரும் தகவலை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ×