என் மலர்
உள்ளூர் செய்திகள்

கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
- டாக்டர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்
- சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கம்மவான்பேட்டை கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் கீழ்பள்ளிப்பட்டு கால்நடை மருத்துவர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை அளித்தார். சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Next Story






