என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பவுர்ணமி இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு பவுர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • அக்னி நட்சத்திரம் முடியும் வரை அபிஷேகம் நடக்கும்
    • நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூரில் இரட்டை சிவாலயம் ஏகாம்பரேஸ்வரர், காசிவிசுவநாதருக்கு இன்று அக்னிநட்சத்திரம் முன்னிட்டு தாராபிஷேகம் தொடங்கியது.

    27 வகையான மூலீகைகள் அடங்கிய தண்ணீர் மூலவருக்கு நேராக வைத்து விழும் படி செய்யப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை அபிஷேகம் நடக்கும் என கோவில் நிர்வாகி சரவணன் தெரிவித்தார்.

    • புதிய வீடு கட்டியதால் கடன் தொல்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் அடுத்த அப்துல்லாபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (23). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் புதிய வீடு கட்டி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி காஞ்சிபுரத்தில் உள்ள அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் எங்களை தேட வேண்டாம் என்று சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளார்.

    இது குறித்து அவரது தந்தை அதே பகுதியில் வசிக்கும் மகனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது வீடு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.

    பின்னர் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் தூசி போலீஸ் நிலையத்தில் செந்தமிழ் செல்வியின் அண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ராஜசேகர் மற்றும் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

    • தபால் நிலையம் முன்பாக நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் வீ.பாரதிதாசன் ஆகியோருக்கு கீழ்பென்னாத்தூர் நகர, ஒன்றிய பா.ம.க சார்பில் தனித்தனியாக கவன ஈர்ப்பு கடிதங்கள் அனுப்பும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் தபால் நிலையம் முன்பாக நடைபெற்றது.

    கீழ்பென்னாத்தூர் நகர பா.ம.க செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட அமைப்புச் செயலாளர் கே.ஆர்.முருகன், மாவட்ட வன்னியர் சங்க துணைத் தலைவர் கனகராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கீழ்பென்னாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் பக்தவச்சலம் கலந்து கொண்டார்.

    • ஆரணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த அடையபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 32). இவர் லாரி டிரவைர்.

    இவர் சொந்த வேலை காரணமாக பைக்கில் கருகத்தாங்கல் கிராமத்திற்கு சென்றார்.

    வந்தவாசியிலிருந்து ஆரணி நோக்கி விறகு ஏற்றி ெகாண்டு டிரைவர் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து சண்முகம் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்தார்.

    தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் சண்முகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
    • இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி கிரிவலம் இன்று இரவு 11.59 மணிக்கு தொடங்கி நாளை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது.

    பௌர்ணமி கிரிவலம் செல்ல சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று இரவு பௌர்ணமி தொடங்குவதால் வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிய தொடங்கியுள்ளனர். மேலும் இன்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி அன்று மூலவரை தரிசனம் செய்ய 4 மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். இதை தவிர்க்க அண்ணாமலையார் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு விபூதி குங்குமம் வழங்குவதை தவிர்த்து வேறு பகுதியில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    சாமி தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்கள் வழக்கமாக கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் திருமஞ்சன கோபுரம் வழியாகவும் பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராஜகோபுரம் மற்றும் கிளி கோபுரம் பகுதியில் ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    பக்தர்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 1958 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. பஸ் நிலையங்களுக்கு செல்ல இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.

    11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்த வசதியாக 55 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    கோவில் வளாகத்தில் டாக்டர்கள் அடங்கிய 3 சிறப்பு மருத்துவ குழுக்கள் கிரிவல பாதைகளில் 85 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கோவிலுக்கு வந்து செல்ல ஆட்டோக்களுக்கான சிறப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் 14 கிலோமீட்டர் கிரிவல பாதைகளில் தற்காலிக கழிவறை குடிநீர் வசதி மருத்துவ முகாம்கள் அமைக்கபட்டுள்ளது.

    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் 362 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    • தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.
    • வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி பகுதிக்குட்பட்ட அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் பனங்காடுகள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது வெடிகுண்டுகளை தேடி கண்டுபிடிக்கும் டிடெக்டர் கருவி மூலம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 1 அடி ஆழத்தில் குழிகளை தோண்டி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை செய்தனர்.

    இதுபற்றி தகவல் வெளியானதும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதன் காரணமாக நேற்று மாலை 3 மணியுடன் போலீசார் தங்கள் சோதனைகளை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இன்று 2-வது நாளாக மீண்டும் சோதனை நடத்திய இடங்களில் போலீசார் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா? என்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது இலங்கையில் இருந்து ராமேசுவரம் வந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் பாம்பன் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை பகுதிகளில் வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை புதைத்து விட்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் வசித்த வீட்டின் அருகில் இருந்து ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டுமின்றி அந்த பகுதியில் சமூக விரோதிகள் மற்றும் கடத்தல் காரர்கள் போதை பொருட்களும் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதிய சாலை பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்பதால், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலையோரம் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் பயணிகளுக்கு நிழற்கூடம் அமைக்கவில்லை.மழை பெய்யும் போது பயணிகள் நனைந்தபடி நின்று பயணம் செய்து வருகின்றனர்.

    குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக இவ்வழியே வாகனங்கள் மூலம் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

    பேரூராட்சி நிர்வாகம் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    • மூலவருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் தென் கரை மண்ட கொளத்தூரில் ஸ்ரீ தர்ம நவேஸ்வரர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா 7-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கும் உற்சவமூர்த்திக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அலங்கரித்த உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாட்டினை விழா குழுவினர் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்
    • இன்று உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

    ஆரணி:

    சத்தீஷ்கர் மாநிலம் ரேவியூட் டூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்சார் (வயது 22). இவர் ஆரணி அடுத்த குரு மந்தாங்கள் கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவருடைய செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவ ருடன் அதே மாநிலத்தை சேர்ந்த 20 பேர் பணியாற்று கின்றனர். நேற்று முன்தினம் இரவு இறைச்சியை சாப்பிட்ட நிலையில் உடல் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் ஆரணி அரசு மருத்துவமனை யில் முகமது சம்சார் சேர்க்கப் பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார்.

    இது சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசில் சுரேஷ் என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் முகமது சம்சார் சாப்பிட்ட இறைச்சி 2 நாட்களுக்கு முன்பு சமைத்தது என்பதும் கெட்டுப் போனதால் உடல் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவரது உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து முகமது சம்சார் உடலை அவரது சொந்த ஊருக்கு இன்று இலவச வாகனம் மூலம் அனுப்புவதாக தெரிவித்தனர்.

    • வாலிபர் கைது
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த அம்மையப் பட்டு பகுதி மீரஷா உசேன் நகர் சேர்ந்தவர் அப்துல் சமது (வயது 27) என்பவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைய டுத்து போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது 7 மூட்டைகள் கொண்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தடை செய் யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட் கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அப்துல் சமதை கைது செய்து ஹான்ஸ் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று நடக்கிறது
    • பக்தர்களுக்கு மோர், தர்பூசணி பழம் வழங்க ஏற்பாடு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி மாவட்ட நிர்வாகமும், மற்றும் கோவில் நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேலும் கோவில் வளாகத்துக்குள் 30 கழிவறைகளும், 50 மீட்டருக்கு குடிநீர் வசதியும். மேலும் பக்தர்களுக்கு மோர், தர்பூசணி பழம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கிரிவலப் பாதையில் கூடுதலாக 600 எல்இடி விளக்கு, 300 கூடுதல் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று இரவு அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர குப்தருக்கு நள்ளிரவில் எருமை மாட்டு பால் அபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளன.

    தொடர்ந்து சாமி சன்னதி முன்பு உள்ளகொடிமரம் அருகில் மன்மததகன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×