என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேகம், மன்மத தகனம் நிகழ்ச்சி
- அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று நடக்கிறது
- பக்தர்களுக்கு மோர், தர்பூசணி பழம் வழங்க ஏற்பாடு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி மாவட்ட நிர்வாகமும், மற்றும் கோவில் நிர்வாகம் சார்பிலும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் கோவில் வளாகத்துக்குள் 30 கழிவறைகளும், 50 மீட்டருக்கு குடிநீர் வசதியும். மேலும் பக்தர்களுக்கு மோர், தர்பூசணி பழம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிரிவலப் பாதையில் கூடுதலாக 600 எல்இடி விளக்கு, 300 கூடுதல் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமி அன்று இரவு அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர குப்தருக்கு நள்ளிரவில் எருமை மாட்டு பால் அபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளன.
தொடர்ந்து சாமி சன்னதி முன்பு உள்ளகொடிமரம் அருகில் மன்மததகன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






