என் மலர்
திருவள்ளூர்
- பாதிக்கப்பட்டவர்கள் சிறுவனின் உடலை அடக்கம் செய்யப்போவதில்லை எனக்கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் சுடுகாட்டுக்கு மாற்றுப்பாதை அல்லது மாற்று இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியில் அடங்கிய வேலபஞ்ச நகரில் 50-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்கள் இறந்தவர்களின் உடலை தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் வழியாக சுமந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இதனால் சுடுகாட்டிற்கு செல்ல மாற்று பாதை அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே மாற்று இடம் தேர்வு செய்து தருமாறு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
வழக்கமாக சுடுகாட்டிற்கு செல்லும் விளைநிலங்களில் தற்போது நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் அதன் வழியாக உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சுடுகாட்டிற்கு மாற்று பாதை அல்லது மாற்று இடம் ஒதுக்கி தரும் வரை சிறுவனின் உடலை அடக்கம் செய்யப் போவதில்லை எனக்கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் சுடுகாட்டுக்கு மாற்றுப்பாதை அல்லது மாற்று இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வேறு வழியின்றி விளைநிலம் வழியாகவே சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.
- புழல் ஏரிக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த 19-ந் தேதி முதலே உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
- சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 823 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூந்தமல்லி:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் 'மாண்டஸ்' புயலால் பெய்த தொடர்மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து 3 ஆயிரம கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை குறைந்ததால் படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மழை முழுவதும் ஓய்ந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிட்டது.
இதையடுத்து ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 246 கனஅடி மட்டும் தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 130 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 24 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புழல் ஏரிக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்ததால் கடந்த 19-ந் தேதி முதலே உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 187 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2803 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த உயரமான 21 அடியில் 18.95 அடிக்கு தண்ணீர் உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி. இதில் 2896 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 1280 கனஅடி தண்ணீர் வருகிறது. 1053 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கனஅடி. இதில் 823 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 15 கனஅடி தண்ணீர் வருகிறது.
கண்ணன்பேட்டை தேர்வாய் கண்டிகை ஏரி அதன் முழு கொள்ளளவான 500 மி.கனஅடியில் 496 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
- அரிசி கடத்தலில் ஈடுபட்ட பிரகாசை போலீசார் கைது செய்தனர்.
- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி வேனில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3½ டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை இயக்குநர் அபாஷ்குமார் உத்தரவின்பேரில் போலீஸ்சூப்பிரண்ட கீதா மேற்பார்வையில், டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலை கிராமத்தில் சமுதாயக்கூடம் அருகே வந்த மினி வேனை தடுத்து நிறுத்த முயன்றனர்.
உடனே சிறிது தூரத்தில் வேனை நிறுத்திவிட்டு டிவைர் தப்பி ஓடிவிட்டார். வேனில் இருந்த கசவ நல்லாத்தூர் கிராமம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரகாஷ் என்பவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
இதில் வேனில் 3½ டன் ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரிந்தது. அவற்றை ஆந்திராவுக்கு கடத்தி செல்ல இருப்பதும் தெரிந்தது.
இதனையடுத்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் டிரைவர் முரளி மற்றும் வாகன உரிமையாளர் சுந்தர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இதேபோல் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி வேனில் சுமார் 50 கிலோ எடைக்கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3½ டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஆந்திராவுக்கு கடத்த முயன்ற மொத்தம் 7 டன் அரிசி சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
- தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் பூந்தமல்லி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தர வதனம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உசேன் (22) ஜெகன் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து குட்கா, புகையிலையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள கடையில் குட்கா, புகையிலை விற்ற மகேந்திர குமாரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் கைது செய்தனர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
+2
- ஒருவார காலத்திற்குள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்காலிக தரைபாலம் அமைத்து தரப்படும்.
- இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மேம்பால பணிகள் முற்றிலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், வெங்கல் அருகே மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் பூண்டி ஏரியின் உபரி நீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி நேற்று பிரசூரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை மெய்யூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா, இரண்டு ட்ரான்ஸ்பார்மர்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் மேற்கண்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டார்.
மேலும், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒரு வார காலத்திற்குள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்காலிக தரைபாலம் அமைத்து தரப்படும். இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மேம்பால பணிகள் முற்றிலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது பூண்டி ஒன்றிய திமுக செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், பொன்னுசாமி, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் தில்லை குமார், ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
- அதிமுக மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- நகர செயலாளர் செல்வகுமார், நகர துணை தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
பொன்னேரி:
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, நெய் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகர அதிமுக சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமை தாங்கினார்.
இதில் நகர செயலாளர் செல்வகுமார், நகர துணை தலைவர் விஜயகுமார், முன்னாள் பேரூர் தலைவர் பா. சங்கர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பானு பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் சுமித்ரா குமார் செல்வழகி எர்ணாவூரான், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் பிரகாஷ், பொன்னேரி நகராட்சி கவுன்சிலர்கள் மணிமேகலை, சுரேஷ்,, அபிராமி சரண்யா, ஆனந்த், மீஞ்சூர்மாரி, ஆரணி ஓம் சக்தி குணபூபதி, பொன்னேரி யுவராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மதுரை மற்றும் கோவையில் மாநில அளவிலான கலைப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைப்போட்டிகளை பள்ளி கல்வித்துறை நடத்தியது. 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என 3 பிரிவுகளில் இந்த போட்டி நடைபெற்றது.
ஓவியப்போட்டி (நுண்கலை), இசைப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி, நாடகப்போட்டி, மொழித்திறனுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி என்று 6 வகையான கலைப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் புழல் அருகே உள்ள கண்ணப்பசாமி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
6 முதல் 8-ம் வகுப்பு வரை நடந்த தனிநபர் நடிப்பு பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் அப்துல் பாரிஸ், குழுப்பாடல் போட்டியில் மனிதநேய பாடல் தலைப்பில் சனுஷ்டிக்கா குழுவினர் முதல் பரிசு பெற்றனர். இதேபோல் 9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் மேற்கத்திய நடனப் போட்டியில் வர்ஷினி குழுவினர் முதல் பரிசை வென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற இவர்கள் மதுரை மற்றும் கோவையில் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
- மெய்யூர் ராஜாபாளையம்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்கு வரத்து முற்றிலும் தடைபட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மெய்யூர் ராஜாபாளையம்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதனை மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்றுவர பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் மெய்யூர் ராஜபாளையம்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி முழுமையாக சேதம் அடைந்தது.
இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்கு வரத்து முற்றிலும் தடைபட்டது. இந்த பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருகிறது.
இதேபோல் திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக கொண்டஞ்சேரி - சத்தரை இடையிலான தரைப்பாலம் துண்டானதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக காவேரிப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீராலும் மற்றும் சுற்றுவட்டார ஏரிகள் உபரி நீர் திறப்பால் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சத்தரை-கொண்டஞ்சேரி இடையிலான தரைப்பாலம் துண்டானதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றில் இறங்கி கடந்து வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.
அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு 7 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை இருப்பதால் பொது மக்களும் ஆற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி ஊருக்கு கடந்து சென்று வருகின்றனர். இதே நிலை கடந்த 2 வாரங்களாக நீடித்து வருகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
எனவே ராஜபாளையம்-மொண்ணமேடு, சத்தனா-கொண்டஞ்சேரி இடையேயான சேதம் அடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.
- 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், கமலக்கண்ணன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், மெல்கி ராஜா சிங், சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு ஓய்வூதியர்கள் மீதான நிலுவை ஒழுங்கு நடவடிக்கைகளின் மீது தாமதம் இல்லாமல் விசாரணை செய்து நிர்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும்.
ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும். ஓய்வூதியம் குறை தீர்வு கூட்டத்தினை மாநில, மாவட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தி நிலுவை இனங்கள் மீது தீர்வு காண வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பரமசிவம் நன்றி உரையாற்றினார்.
- மீஞ்சூர் அடுத்த வல்லூரை சேர்ந்தவர் ஷேக் முகமது சல்மான்.
- வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது.
மீஞ்சூர் அடுத்த வல்லூரை சேர்ந்தவர் ஷேக் முகமது சல்மான். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.கடந்த 16-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சஞ்சய், புளியந்தோப்பை சேர்ந்த ஆரோக்கியதாஸ்,கொண்டித் தோப்பை சேர்ந்த தனுஷ் குமார் , ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
- சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
- ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் அந்த மாநிலத்தில் உள்ள உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை பயன் படுத்தவில்லை.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து கடந்த 9-ம் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்தது.
இதற்கிடையே கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மாதம் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆந்திராவிலும் பலத்த மழை பெய்ததால் அந்த மாநிலத்தில் உள்ள உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை பயன் படுத்தவில்லை.
மேலும் பூண்டி ஏரியில் இருந்து திருந்து விடப்படும் நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த வாரம் குறைக்கப்பட்டது. வினாடிக்கு 1000 கனஅடி விதம் திறந்து விடப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் ஆந்திரா விவசாயிகள் மீண்டும் கிருஷ்ணா நீரை பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இன்று காலை முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி எரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலைநிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.17அடியாக பதிவானது. 2.877 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் வரத்து வினாடிக்கு 1,520 கன அடியாக இருந்தது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 250 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 38 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- காப்பர் பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
- மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமம் மங்காத்தா குளம் சாலை பகுதியில் கார்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள காப்பர் பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






