என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

வழி இல்லாமல் விளைநிலம் வழியாக உடலை சுமந்து செல்லும் மக்கள்
இறந்தவரின் உடலை வயல்வழியாக தூக்கி செல்லும் பொதுமக்கள்: சுடுகாட்டு பாதை அமைத்து தர கோரிக்கை

- பாதிக்கப்பட்டவர்கள் சிறுவனின் உடலை அடக்கம் செய்யப்போவதில்லை எனக்கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் சுடுகாட்டுக்கு மாற்றுப்பாதை அல்லது மாற்று இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனுப்பம்பட்டு ஊராட்சியில் அடங்கிய வேலபஞ்ச நகரில் 50-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்கள் இறந்தவர்களின் உடலை தனியாருக்கு சொந்தமான விளை நிலங்கள் வழியாக சுமந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர்.
இதனால் சுடுகாட்டிற்கு செல்ல மாற்று பாதை அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே மாற்று இடம் தேர்வு செய்து தருமாறு அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
வழக்கமாக சுடுகாட்டிற்கு செல்லும் விளைநிலங்களில் தற்போது நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால் அதன் வழியாக உடலை கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் சுடுகாட்டிற்கு மாற்று பாதை அல்லது மாற்று இடம் ஒதுக்கி தரும் வரை சிறுவனின் உடலை அடக்கம் செய்யப் போவதில்லை எனக்கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் சுடுகாட்டுக்கு மாற்றுப்பாதை அல்லது மாற்று இடம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து வேறு வழியின்றி விளைநிலம் வழியாகவே சிறுவனின் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.