என் மலர்
திருவள்ளூர்
- படுக்கையறை கதவையும் உடைத்து உள்ளே சென்று தரையில் மயங்கி கிடந்த மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்து மருத்துவர்களை அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர்.
- தன் மகன் செல்போனில் அழைத்த போது நடந்ததை கூறியதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர்:
ஜெ.ஜெ நகர் தீயணைப்பு துறைக்கு பெங்களூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அழைத்து முகப்பேர் வி.ஜி.பி. நகரில் தங்கியுள்ள அவரது தாயார் கிரிஜா(67) உடல் நிலை சரியில்லாமல் மயக்க மடைந்த நிலையில் இருப்பதாகவும், வீட்டின் வெளிக்கதவும், படுக்கை அறையும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வெளிப்புற கதவையும், படுக்கையறை கதவையும் உடைத்து உள்ளே சென்று தரையில் மயங்கி கிடந்த மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்து மருத்துவர்களை அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர்.
மேலும் ரத்த அழுத்தம் குறைந்ததால் நள்ளிரவே மயக்கம் அடைந்து கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகவும் தன் மகன் செல்போனில் அழைத்த போது நடந்ததை கூறியதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.
- பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- முதற்கட்ட களிமண் வார்ப்பு பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு சிற்பியிடம் கேட்டறிந்தார்.
பொன்னேரி:
மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நுழைவு வாயிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பள்ளிக்கல்வித்துறை வளாகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் வளாகம் அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனுக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சிலை வடிவமைக்கும் பணியினை மீஞ்சூர் அடுத்த புதுப்பேட்டில் சிற்பி தீன தயாளன் செய்து வருகிறார். இதில் முதற்கட்ட பணியான களிமண் வார்ப்பு சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பிளாஸ்ட் ஆப் பாரிஸ், மெழுகு சிலை, வெண்கலம் வார்ப்பு என ஒவ்வொரு கட்டமாக நடைபெறும் எனவும் 3 வாரமாக நடைபெறும். பணியில் தினந்தோறும் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் சிற்பி தீனதயாளன் தெரிவித்தார்.
8½ அடி உயரம் கொண்ட வெண்கல சிலையானது 550 கிலோ எடை கொண்டதாகவும் இதன் முதற்கட்ட களிமண் வார்ப்பு பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு சிற்பியிடம் கேட்டறிந்தார்.
அன்பழகன் சிலையில் உள்ள கண்ணாடியை சற்று சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- சத்தரை மேட்டு காலனியை சேர்ந்த சிவக்குமாருக்கும் இளஞ்செழியனுக்கும் தகராறு ஏற்பட்டது.
- மப்பேடு போலீசார் தப்பி ஓடிய சஞ்சய், சிவக்குமார், விஜயகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புதுமாவிலங்கை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் (42). புதுமாவிலங்கை பஞ்சாயத்தில் 7-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ராகவன் என்பவரின் தாயார் காலமானார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இளஞ்செழியன் சென்றார்.
அங்கு மேளம் அடித்துக் கொண்டிருந்த சத்தரை மேட்டு காலனியை சேர்ந்த சிவக்குமாருக்கும் இளஞ்செழியனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் இளஞ்செழியன் மோட்டார் சைக்கிளில் வரும்போது அவரை வழிமறித்த சிவகுமார், அவரது மகன் சஞ்சய் மற்றும் விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து இளஞ்செழியனை கத்தியால் தலை மற்றும் உடலில் வெட்டியும் உருட்டு கட்டையாலும் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மப்பேடு போலீசார் தப்பி ஓடிய சஞ்சய், சிவக்குமார், விஜயகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
- 24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும்.
- கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொதுவெளியில் விடாமல் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகின்ற வகையில் விடப்படுகின்ற கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுவதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராத தொகையாக விதிக்கப்படும் நடைமுறை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் காவல்துறையுடன் இணைந்து பொது மக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும்.
இந்த கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2 ஆயிரம் அபராத தொகையை செலுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுவிடம், கால்நடை வளர்ப்பவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று, பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் கொண்டு செல்லலாம்.
24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமை கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டு உள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும். எனவே கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொதுவெளியில் விடாமல் முறையாக பராமரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
கால்நடைகளை தொடர்ந்து பொதுவெளியில் விடும்பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டு, போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின.
- ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடி தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, கல்பாக்கம், வாயலூர், நெய்தவாயல், மெரட்டூர், கணியம்பாக்கம், வேலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிறுவாக்கம் பகுதி சீமாவரம் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் குடிநீர் போர்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கடந்த 10 தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
பல்வேறு ஊராட்சிகளில் இப்பணிகள் செயல்படுத்த முடியாத நிலையில் தற்காலிகமாக ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத தண்ணீரால் பொது மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பகுதி மக்கள் கேன் குடிநீரை அதிக விலை கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
- ஆரணி ஆற்று கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.
- வெள்ளம் சேதத்தை தடுக்க ஒரே அடியாக அல்லாமல் படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும்.
ஊத்துக்கோட்டை:
திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த தண்ணீர் ராமகிரி, சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம், ஆரணி, புதுவயல், பொன்னேரி வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆறு ஆந்திராவில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 60 கிலோமீட்டர் தூரத்துக்கும் பாய்கிறது. பிச்சாட்டூர் அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் 1.893 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
வட கிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் ஆரணி ஆற்று கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் சுமார் 20 கிராமங்களில் சேதம் ஏற்பட்டது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் பாலாறு கோட்ட பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில் அதிகாரிகள் ஜெயக்குமாரி, வெற்றி வேலன், ஜெயகுரு, பால சுந்தரம், கண்ணன், சரவணன், புவனேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழு நேற்று பிச்சாட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தது.
தண்ணீர் வரத்து, இருப்பு, திறப்பு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மதகுகள் நன்றாக செயல்படுகின்றனவா என்று ஆராய்ந்தனர்.
அணைக்கு நீர்வரத்து அதிகமாகி உபரி நீர் திறக்கும் போது ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்படுகிறது. வெள்ளம் சேதத்தை தடுக்க ஒரே அடியாக அல்லாமல் படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திரா பொதுப்பணித் துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.
- பலத்த காயமடைந்த கோகுல்ராஜ் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகர் ஒண்டிக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுல் ராஜ் (24). மணவாள நகர் பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். கோகுல்ராஜ் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் பகுதியில் சென்றார்.
அப்போது அங்கு இருந்த மணவாளநகர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரவீன் என்கிற குல்லா, நவீன் என்கிற சீனு, முகேஷ் ஆகிய 3 பேரும் அவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தலையில் வெட்டினார்கள். மேலும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் பலத்த காயமடைந்த கோகுல்ராஜ் இதுகுறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- பணத்தை கவுதம் கொடுக்க மறுத்ததால் ரவுடி கும்பல் அவரை வெட்டி இருப்பதும் தெரியவந்தது.
- ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம். பல் டாக்டர். இவர் திருமுடிவாக்கத்தில் பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கவுதம் வழக்கம்போல் ஆஸ்பத்திரியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் சிலர் கவுதமிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவுதமை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் கதவுமின் கை, மற்றும் கழுத்த, தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் அதேபகுதியை சேர்ந்த ரவுடி ஒருவன், டாக்டர் கதவுமை மிரட்டி ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டி வந்தது தெரிந்தது. பணத்தை கவுதம் கொடுக்க மறுத்ததால் ரவுடி கும்பல் அவரை வெட்டி இருப்பதும் தெரியவந்தது.
ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்கள் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அனுமன்ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் பெரிய குப்பம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் உள்ள 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து மூல மந்திர யாகம் நடைபெற்றது.
பின்னர் 32 அடி உயர முள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 100 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மலர்களால் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. மேலும் 32 அடி உயரம் கொண்ட வடமாலை சாற்றப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்ச நேயருக்கு 67 ஆயிரம் வடை மாலைகள் சாற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் திருப்பந்தியூர், வய லூர், கொட்டையூர், மப்பேடு, கண்ணூர், பண்ணூர், ஸ்ரீபெ ரும்புதூர், திருவள்ளூர், பேரம்பாக்கம், சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், பூஜைகளும் நடை பெற்றது. 1008 மிளகு வடையால் மாலை அணிவித்தும், பாதாம் முந்திரியால் தயாரிக்கப்பட்ட 5 கிலோ வெண்ணையை கொண்டு அலங்காரமும் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர். பெண்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
- அழகு நிலையத்தில் ‘செக்ஸ் மசாஜ்’ நடப்பதாக வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
- தலைமறைவான அழகு நிலைய உரிமையாளரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
வளசரவாக்கம், கிருஷ்ணா நகர் காமராஜ் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் 'செக்ஸ் மசாஜ்' நடப்பதாக வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள அறையில் வாடிக்கையாளர்கள் சிலர் இளம்பெண்ணிடம் 'செக்ஸ் மசாஜ்' செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து செக்ஸ் மசாஜில் ஈடுபட்டு வந்த இளம்பெண்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அழகு நிலையம் என்கிற பெயரில் 'செக்ஸ் மசாஜ்' நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தலைமறைவான அழகு நிலைய உரிமையாளரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது.
- கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
திருத்தணி:
திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் மலைக்கோயிலில் உள்ள தேவர் மண்டபத்தில், கோவில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இந்த பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த 41 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரம், தங்கம் 708 கிராமும், வெள்ளி 19 கிலோ 750 கிராமும் காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- திருவள்ளூர் அடுத்த காக்களூர் அஞ்ச நேயபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி.
- போலீசார் பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் அஞ்ச நேயபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பிரேம் குமார் அறிமுகம் ஆனார். அவர் பணத்தை தன்னிடம் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து விஜயலட்சுமி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை பிரேம் குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
ஆனால் அவர் குறிப்பிட்ட படி வட்டித்தொகை கொடுக்கவில்லை. இதையடுத்து விஜயலட்சுமி பணத்தை திருப்பிகேட்டார். பிரேம்குமார் ரூ.1 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. மீதி பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமி திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






