என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
    X

    பூட்டிய வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி- தீயணைப்பு துறையினர் மீட்டனர்

    • படுக்கையறை கதவையும் உடைத்து உள்ளே சென்று தரையில் மயங்கி கிடந்த மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்து மருத்துவர்களை அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர்.
    • தன் மகன் செல்போனில் அழைத்த போது நடந்ததை கூறியதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.

    அம்பத்தூர்:

    ஜெ.ஜெ நகர் தீயணைப்பு துறைக்கு பெங்களூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அழைத்து முகப்பேர் வி.ஜி.பி. நகரில் தங்கியுள்ள அவரது தாயார் கிரிஜா(67) உடல் நிலை சரியில்லாமல் மயக்க மடைந்த நிலையில் இருப்பதாகவும், வீட்டின் வெளிக்கதவும், படுக்கை அறையும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் வெளிப்புற கதவையும், படுக்கையறை கதவையும் உடைத்து உள்ளே சென்று தரையில் மயங்கி கிடந்த மூதாட்டியை கட்டிலில் படுக்க வைத்து மருத்துவர்களை அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து உள்ளனர்.

    மேலும் ரத்த அழுத்தம் குறைந்ததால் நள்ளிரவே மயக்கம் அடைந்து கட்டிலில் இருந்து கீழே விழுந்ததாகவும் தன் மகன் செல்போனில் அழைத்த போது நடந்ததை கூறியதாகவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×