என் மலர்
நீங்கள் தேடியது "Mechanic Attack"
- பலத்த காயமடைந்த கோகுல்ராஜ் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகர் ஒண்டிக்குப்பம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோகுல் ராஜ் (24). மணவாள நகர் பகுதியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். கோகுல்ராஜ் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் பகுதியில் சென்றார்.
அப்போது அங்கு இருந்த மணவாளநகர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பிரவீன் என்கிற குல்லா, நவீன் என்கிற சீனு, முகேஷ் ஆகிய 3 பேரும் அவரை வழிமறித்து தகராறு செய்து கத்தியால் தலையில் வெட்டினார்கள். மேலும் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதில் பலத்த காயமடைந்த கோகுல்ராஜ் இதுகுறித்து மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






