search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடந்த 41 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்
    X

    கடந்த 41 நாட்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடி உண்டியல் வசூல்

    • திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது.
    • கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறப்பு பெற்றது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் மலைக்கோயிலில் உள்ள தேவர் மண்டபத்தில், கோவில் துணை ஆணையர் விஜயா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இந்த பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கடந்த 41 நாட்களில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரம், தங்கம் 708 கிராமும், வெள்ளி 19 கிலோ 750 கிராமும் காணிக்கையாக கிடைத்து இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×