என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்றத்தூரில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டருக்கு அரிவாள் வெட்டு
    X

    குன்றத்தூரில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டருக்கு அரிவாள் வெட்டு

    • பணத்தை கவுதம் கொடுக்க மறுத்ததால் ரவுடி கும்பல் அவரை வெட்டி இருப்பதும் தெரியவந்தது.
    • ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த தண்டலம் பகுதியை சேர்ந்தவர் கவுதம். பல் டாக்டர். இவர் திருமுடிவாக்கத்தில் பல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கவுதம் வழக்கம்போல் ஆஸ்பத்திரியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் சிலர் கவுதமிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவுதமை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் கதவுமின் கை, மற்றும் கழுத்த, தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் அதேபகுதியை சேர்ந்த ரவுடி ஒருவன், டாக்டர் கதவுமை மிரட்டி ரூ.50 ஆயிரம் மாமூல் கேட்டு மிரட்டி வந்தது தெரிந்தது. பணத்தை கவுதம் கொடுக்க மறுத்ததால் ரவுடி கும்பல் அவரை வெட்டி இருப்பதும் தெரியவந்தது.

    ரவுடி கும்பலை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×