search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூரில் ஆற்றில் மின்மோட்டார்கள் மூழ்கியதால் 20 கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிப்பு
    X

    மீஞ்சூரில் ஆற்றில் மின்மோட்டார்கள் மூழ்கியதால் 20 கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிப்பு

    • சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின.
    • ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடி தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, கல்பாக்கம், வாயலூர், நெய்தவாயல், மெரட்டூர், கணியம்பாக்கம், வேலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிறுவாக்கம் பகுதி சீமாவரம் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் குடிநீர் போர்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கடந்த 10 தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பல்வேறு ஊராட்சிகளில் இப்பணிகள் செயல்படுத்த முடியாத நிலையில் தற்காலிகமாக ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத தண்ணீரால் பொது மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    மேலும் அப்பகுதி மக்கள் கேன் குடிநீரை அதிக விலை கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×