என் மலர்
திருப்பூர்
- திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.
- சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் பெய்ய துவங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பல்லடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அண்ணா நகர், மகாலட்சுமிபுரம், பச்சாபாளையம் காலனி, பனப்பாளையம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் பச்சாபாளையம், பனப்பாளையம், காலனி பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதிலேயே அவர்களுக்கு விடிந்து விட்டது. மேலும் பல்லடம் - தாராபுரம் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக போடப்பட்டிருந்த மண் மழையினால் அரித்துச் செல்லப்பட்டது. அத்துடன் ரோடுகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய செய்து ஊர்ந்து சென்றன. இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களில் ஒரு சிலரின் மோட்டார் சைக்கிள்களில் பழுதாகி நின்றது. மேலும் சாலையில் தாழ்வான பகுதிகளில் அங்காங்கே தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
- மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர்
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டு வரும் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு ஆய்வு மேற்கொண்டதில் அங்கு விற்பனைக்காக வைத்திருந்த 180 மில்லி மது பாட்டில்கள் 10-ம், மது விற்பனை செய்த ரொக்கம் ரூ. 750-ம் பறிமுதல் செய்யப்பட்டது. மது விற்பனையில் ஈடுபட்ட கரூர், புஞ்சைபுகலூர், காந்திநகரை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் வீரமணி (வயது 31) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனா, சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- விசாரணை அறிக்கை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
திருப்பூர்:
பனியன் தொழில் நகரான திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட உள்ளது. போனஸ் வாங்கியதும் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர் புறப்படுகிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை முதல் திருப்பூர் கடைவீதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று முதல் பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கி நடக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்கள் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் நேற்று காலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்கிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ரோந்துப்பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
- காஞ்சிபுரம், ஆரணி பட்டு, தர்மாவரம் திருபுவன பட்டு என பல்வேறு ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- ஆடை ரகங்களுக்கு 5 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு மற்றும் பல்லடம் ரோட்டில் தி திருப்பூர் சில்க்ஸ், எம்.எஸ்.நகரில் திருப்பூர் கணபதி சில்க்ஸ், அவினாசி ரோட்டில் திருப்பூர் ஸ்ரீமருதர் சில்க்ஸ் என பல இடங்களில் கிளைகளுடன் செயல்படும் தி திருப்பூர் சில்க்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை யொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 4 பிளவுஸ் பிட் ரூ.99-க்கும், ஒருகாட்டன் நைட்டி ரூ.149-க்கும், ஒரு மேஜிக் கிரேப் சேலை, ரூ.199-க்கும், ஒரு பேன்சி டாப் ரூ.149-க்கும், ஒரு லெக்கின்ஸ் ரூ.99-க்கும், பட்டியாலா சுடிதார் செட் ரூ.499-க்கும், ஒரு சுடிதார் மெட்டீரியல் ரூ.249-க்கும், காட்டன் மிடி ரூ.349-க்கும் வழங்கப்படுகிறது.
இதுபோல் 4 பார்மல் சட்டை ரூ.999-க்கும், 3 கேசுவல் சட்டை ரூ.999-க்கும், 3 காட்டன் பேண்ட் ரூ.999-க்கும், 2 லைக்ரா ஜீன்ஸ் பேண்ட் ரூ.750-க்கும், ஒரு கலர் வேட்டி, சட்டை(மேட்சிங் காம்போ) ரூ.650-க்கும், மணமகன் பட்டுவேட்டி, சட்டை, கோட்சூட், ஷர்வாணி, மணமகள் காஞ்சிபுரம், ஆரணி பட்டு, தர்மாவரம் திருபுவன பட்டு என பல்வேறு ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.4999-க்குமேல் ஆடைகள் வாங்கினால் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது பற்றி நிர்வாகத்தினர் கூறுகையில், ஆடை ரகங்களுக்கு 5 முதல் 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
- வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 18-ந்தேதி நடைபெற உள்ளது.
- விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு, கொங்கணகிரியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கந்த சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. விழாவையொட்டி, 13-ந் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா ெதாடங்குகிறது. தொடர்ந்து, பக்தர்கள் விரத காப்பு அணிதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18-ந்தேதி மாலை 4.30 மணிக்கு கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம், வேல் பூஜை தொடர்ந்து வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் கந்த பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் திருக்கல்யாண வைபவம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், அபிஷேகம் மற்றும் தீபாராதனை போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
இதேபோல் வாலிபாளையத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா 18-ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 13-ந்தேதி அபிஷேகம், காப்புகட்டுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா தொடங்குகிறது. மேலும் திருக்கல்யாண உற்சவம், மகாதீபாராதனை, சுவாமி திருவீதி உலா போன்றவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகிற 13- ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து, சஷ்டி விரதம் துவங்குகின்றனர். தொடர்ந்து அலகுமலை ஆஞ்சநேயர் வளாகத்தில் உள்ள சண்முகம் மஹாலில் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 14-ந் தேதி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேக ஆராதனை, கலசாபிஷேகம், மகா அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. மேலும் 18-ந்தேதி மதியம் 3 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் சுவாமி கோவிலில் சூரனை வதம் செய்ய பாலதண்டாயுதபாணி சக்திவேல் வாங்கும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை, 5 மணி அளவில் சூரசம்ஹாரம் மற்றும் தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து சமகால மூர்த்திக்கு சாந்தாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், பக்தர்கள் கங்கணம் களைந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். அன்னதானம், விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. 19-ந்தேதி திருக்கல்யாணம் மற்றும் விருந்தும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர்.
- பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது.
திருப்பூர்:
தீபாவளி நெருங்கி வருவதால், ஊரெங்கும் களைக்கட்ட துவங்கியிருக்கிறது பண்டிகையின் கோலாகலம். நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் போலீசார் சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கியில், சில 'உஷார்' அறிவிப்புகள் தொடர்ந்து ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர். பெரும்பாலும், மாலை, இரவு நேரங்கள், வார விடுமுறை நாட்களில், தீபாவளி பர்சேஸ் களைகட்டியுள்ள நிலையில், கடைத்தெரு வீதிகளில், மக்கள் அடர்த்தியாக குவிகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஆண்களிடம் பிக்பாக்கெட் அடிப்பது, பெண்களின் 'ேஹண்ட்பேக்' பறித்து செல்வது, பல நேரங்களில் பெண்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்து என பல குற்ற சம்பவங்கள் குறைவில்லாமல் நடக்கின்றன. சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர். இந்த திருட்டில் ஈடுபடுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார். திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், 'பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேச வேண்டாம். பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது என, தொடர்ந்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அறிவிப்பை ஒலிபரப்பி வருகின்றனர்.
- விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த சீசனில், கூடுதல் பரப்பில், தக்காளி நாற்று நடவு செய்தனர்.
- மழை காரணமாக, தக்காளி செடிகளில், பூ உதிர்தல் மற்றும் புழுத்தாக்குதல் போன்றவை பரவி வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்புற பகுதிகளில், ஒவ்வொரு சீசனிலும், கிணற்றுப்பாசனத்துக்கு, 20 ஆயிரம் ஏக்கர் வரை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. உடுமலை தினசரி சந்தையில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் தக்காளியை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் தக்காளி உற்பத்தி பாதித்த போது இப்பகுதியில், ஓரளவு சீரான வரத்து இருந்தது. இதனால், பிற மாவட்ட வியாபாரிகள் வழக்கத்தை விட, கூடுதலாக உடுமலை சந்தைக்கு வரத்துவங்கினர். விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த சீசனில், கூடுதல் பரப்பில், தக்காளி நாற்று நடவு செய்தனர். இந்நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், தரமான தக்காளி உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்பகுதியில், கொடி கட்டும் முறையை பின்பற்றி, மழைக்காலத்திலும், தரமான தக்காளி உற்பத்தி செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை காரணமாக, தக்காளி செடிகளில், பூ உதிர்தல் மற்றும் புழுத்தாக்குதல் போன்றவை பரவி வருகிறது. இதனால், தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. மழை தொடர்ந்தால், உற்பத்தி மேலும் சரியும். அறுவடை பணிகளிலும் பாதிப்பு ஏற்படும்,' என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலத்திலும், சந்தைக்கு நிலையான வரத்து மற்றும் தரமான தக்காளி உற்பத்தி செய்ய கொடி கட்டும் முறை உதவிகரமாக உள்ளது. எனவே இந்த தொழில்நுட்பம் குறித்து, தோட்டக்கலைத்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மானியமும் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- உணவு மற்றும் சத்துணவு முட்டையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
- திருமுருகன்பூண்டியி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டாா்.
திருப்பூர்:
திருப்பூா் தண்ணீா்ப்பந்தல் பகுதியில் உள்ள மரியாலயா பெண் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.அங்கு தங்கியிருந்தோரிடம் கலெக்டர் பேசியதாவது:-
கைவிடப்பட்ட பெண்கள், குழந்தைகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், அவா்கள் மறுவாழ்வுக்கும் அரசு மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது. பெண்கள், குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்து கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை வழங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகளை இந்த இல்லம் மேற்கொண்டு வருகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து, அங்கு தங்கியுள்ளவா்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து இனிப்புகளை வழங்கினாா்.இதைத் தொடா்ந்து, அவிநாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் மையம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை பாா்வையிட்டாா்.
மேலும், திருப்பூா் அனுப்பா்பாளையம் புதூரில் உள்ள குழந்தைகள் மையத்தில் வழங்கப்படும் உணவு மற்றும் சத்துணவு முட்டையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதாதேவி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ரியாஸ் அகமது பாஷா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஸ்டெல்லா, மரியாலயா பெண் குழந்தைகள் இல்லத்தின் செயலாளா் சகாயம், நிா்வாக அலுவலா் சாரதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
- மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும்,வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன.
உடுமலை:
தமிழ்நாட்டில் ஆதரவற்ற, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்களின் வாழ்வாதாரத்துக்கான அடிப்படையை வழி நடத்த, மகளிர் குழுக்கள், அந்தந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் திட்டத்தின் தொகுப்பு வழிநடத்துநர்கள் வாயிலாக, குழுவினருக்கு, அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில், வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்குகின்றனர். மேலும் வங்கிகளின் உதவியுடன் குழுவினருக்கு, சுயதொழில் துவங்குவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் குழுவினருக்கு, பல வழிகளிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அதில், 50 சதவீத பெண்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். கல்வித்தகுதி இல்லாத பெண்களுக்கு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளை திட்டம் வழங்குகிறது. மகளிர் குழுவினருக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும், வருமானம் ஈட்டும் வகையில், அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தவும், மாவட்ட அளவில், அங்காடிகள் துவக்கப்பட்டுள்ளன. அங்காடிகளில், 10 சதவீதம் மட்டுமே இத்தகைய பொருட்கள் விற்பனை ஆகின்றன. கைவினைப் பொருட்கள் தயாரிப்பும், வெகுவாக குறைந்துவிட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றுப்பொருளாக இருக்கும், பாக்குமட்டை, பனை ஓலை, மூங்கில் கூடைகள், உள்ளிட்ட பல்வேறு வகைகளிலிருந்து, பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பதற்கு, மகளிர் குழுக்களை அரசு ஊக்குவிக்க எதிர்பார்க்கின்றனர். இதன் வாயிலாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கும், குழுவினரின் வாழ்வாரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகளிர் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது
- வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும்
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு இதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகளும், தேர்தல் கமிஷனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது வாக்காளர் சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்ட சபை தொகுதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம், வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுகிறது. தாலுகா அலுவலகங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களாக மாறி வருகிறது. அவ்வகையில், விண்ணப்பித்து இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள், இ - வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, பிளக்ஸ் பேனர் தயாரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவை, வாக்காளர் பார்வைக்கு படும்படி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், 'வரும் 2024 ஜன., 1 நிலவரப்படி, 18 வயது பூர்த்தியாகும் நபர்கள், பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தவிர, 2024 ஏப்., 1 - ஜூலை 1 மற்றும் அக்., 1 தேதி நிலவரப்படி, 18 வயது பூர்த்தியடையும் நபர்களும், முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம். புதிதாக பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 ஆகிய விண்ணப்பங்களில், தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். தவிர, Voter Help Line என்ற மொபைல் ஆப் வாயிலாகவும், ஆவணங்களை இணைத்து, பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தம் கோரியும், ஆதார் விபரம் இணைக்கவும், டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
- வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.
உடுமலை:
பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 6-ந்தேதி முதல் வரும் 10-ந்தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுச்சீட்டு சமர்ப்பித்து, முன்னதாகவே 'ஹால் டிக்கெட்' பெற்று வருவோர் மட்டுமே, செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது
- குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தாராபுரம்:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் பொதுமக்கள் பெரும்பாலும் தீபாவளிக்கு புத்தாடைகள், தங்க நகைகள், பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பெரிய கடைவீதி, ஜவுளி கடை வீதி, பொள்ளாச்சி ரோடு, சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகை கடைகள் மற்றும் மளிகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நகரின் மையப்பகுதியான பூக்கடைக்கார்னரில் தாராபுரம் கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன் (சட்டம்-ஒழுங்கு), சஜினி (போக்குவரத்து), குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமசிவம், விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் சவுக்கு கட்டைகள், பலகைகளால் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இப்பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாத வண்ணம் 24 மணி நேரமும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் நடமாட்டத்தையும தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணிக்கு தொடங்கும் கண்காணிப்பு பணி இரவு 11 மணி வரை நீடிக்கிறது. போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில் "பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது பணம் மற்றும் நகைகள்,செல்போன்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினர்.






