search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி பண்டிகை கோலாகல ஆரம்பம்: பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை - போலீசார் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு
    X

    கோப்புபடம். 

    தீபாவளி பண்டிகை கோலாகல ஆரம்பம்: பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை - போலீசார் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு

    • சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர்.
    • பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளி நெருங்கி வருவதால், ஊரெங்கும் களைக்கட்ட துவங்கியிருக்கிறது பண்டிகையின் கோலாகலம். நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் போலீசார் சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கியில், சில 'உஷார்' அறிவிப்புகள் தொடர்ந்து ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர். பெரும்பாலும், மாலை, இரவு நேரங்கள், வார விடுமுறை நாட்களில், தீபாவளி பர்சேஸ் களைகட்டியுள்ள நிலையில், கடைத்தெரு வீதிகளில், மக்கள் அடர்த்தியாக குவிகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஆண்களிடம் பிக்பாக்கெட் அடிப்பது, பெண்களின் 'ேஹண்ட்பேக்' பறித்து செல்வது, பல நேரங்களில் பெண்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்து என பல குற்ற சம்பவங்கள் குறைவில்லாமல் நடக்கின்றன. சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர். இந்த திருட்டில் ஈடுபடுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார். திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், 'பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேச வேண்டாம். பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது என, தொடர்ந்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அறிவிப்பை ஒலிபரப்பி வருகின்றனர்.

    Next Story
    ×