search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pickpocket thieves"

    • சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர்.
    • பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளி நெருங்கி வருவதால், ஊரெங்கும் களைக்கட்ட துவங்கியிருக்கிறது பண்டிகையின் கோலாகலம். நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் போலீசார் சார்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கியில், சில 'உஷார்' அறிவிப்புகள் தொடர்ந்து ஒளிப்பரப்பு செய்து வருகின்றனர். பெரும்பாலும், மாலை, இரவு நேரங்கள், வார விடுமுறை நாட்களில், தீபாவளி பர்சேஸ் களைகட்டியுள்ள நிலையில், கடைத்தெரு வீதிகளில், மக்கள் அடர்த்தியாக குவிகின்றனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஆண்களிடம் பிக்பாக்கெட் அடிப்பது, பெண்களின் 'ேஹண்ட்பேக்' பறித்து செல்வது, பல நேரங்களில் பெண்கள் அணிந்துள்ள நகைகளை அபேஸ் செய்து என பல குற்ற சம்பவங்கள் குறைவில்லாமல் நடக்கின்றன. சட்டை பாக்கெட் மற்றும் பேண்டின் பின் பாக்கெட்டில் வைக்கப்படும் 'மொபைல்போன்'களை அலேக்காக திருடி செல்கின்றனர். இந்த திருட்டில் ஈடுபடுவது ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் தான். எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார். திருப்பூர் நகரின் பிரதான சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கியில், 'பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் பேச வேண்டாம். பலே ஆசாமிகள், தங்களின் கவனத்தை திசை திருப்பி, பணம், தங்க நகை போன்ற பொருட்களை திருடி செல்லும் வாய்ப்புகள் உள்ளது என, தொடர்ந்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அறிவிப்பை ஒலிபரப்பி வருகின்றனர்.

    • பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வசிஷ்ட நதி ஆற்றை கடந்து தான் அந்த பகுதி மக்கள் செல்ல வேண்டும்.
    • இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரவு, பகல் நேரங்களில் அந்த வழியாக செல்வோரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சேலம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் செல்லும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினந்தோறும் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வசிஷ்ட நதி ஆற்றை கடந்து தான் அந்த பகுதி மக்கள் செல்ல வேண்டும். தொடர் மழையின் காரணமாக கோட்டை, வடக்கு காடு, முல்லைவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் மற்றும் பல்வேறு வேலைகளுக்கு செல்வோர், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பாலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இரவு, பகல் நேரங்களில் அந்த வழியாக செல்வோ ரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர்.

    நேற்று ஆத்தூர் கோட்டை பகுதியை சேர்ந்த முனியன் என்பவரிடம் பிக்பாக்கெட் திருடன் கைவரிசை காட்டி யுள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த பணத்தை திருடி சென்று விட்டான். இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எனவே அந்த பகுதியில் போலீசார் முறையாக கண்காணிப்பு செய்து, திருட்டை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் பஸ் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் இரவில் போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தாலும் பயணிகள்பஸ் நிலையத்திலேயே அயர்ந்து உறங்க கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது.
    • குடிபோதையில் கீழே கிடக்கும் ஆசாமிகளை குறிவைத்து அவர்களின் உறவினர்கள் போலவே அருகே அமர்ந்து அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணம், நகை மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, சென்னை, கோவை, மதுரை, தேனி, கம்பம், குமுளி உள்ளிட்ட தென் தமிழகத்துக்கும் பல்வேறு மாவட்டங்களுக்கு இரவு பகலாக பஸ் இயங்கி வருகின்றது.

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் இரவில் போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தாலும் பயணிகள்பஸ் நிலையத்திலேயே அயர்ந்து உறங்க கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது.

    மேலும் பயணம் செய்யக்கூடிய பயணி மது அருந்தி வந்த சூழ்நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அயர்ந்து மதுபோதையில் உறங்கும் பொழுது மது போதையில் தூங்குபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றது.

    குடிபோதையில் கீழே கிடக்கும் ஆசாமிகளை குறிவைத்து அவர்களின் உறவினர்கள் போலவே அருகே அமர்ந்து அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணம், நகை மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    இதனால் மது அருந்துபவர்கள் மட்டுமன்றி பஸ்கள் கிடைக்காமல் காத்திருக்கும் பயணிகளின் உடமைகளும், தொடர்ந்து பறிபோய் வருகிறது.

    இரவு கரூர் பஸ் நிலையம் அருகே மது போதையில் படுத்து இருப்பவரிடம் பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×