என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மழைக்காலத்திலும் தரமான உற்பத்தி கிடைக்கும்: உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடிக்கு கொடி கட்டும் முறையை பின்பற்ற வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
- விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த சீசனில், கூடுதல் பரப்பில், தக்காளி நாற்று நடவு செய்தனர்.
- மழை காரணமாக, தக்காளி செடிகளில், பூ உதிர்தல் மற்றும் புழுத்தாக்குதல் போன்றவை பரவி வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்புற பகுதிகளில், ஒவ்வொரு சீசனிலும், கிணற்றுப்பாசனத்துக்கு, 20 ஆயிரம் ஏக்கர் வரை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. உடுமலை தினசரி சந்தையில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் தக்காளியை விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு, மாநிலம் முழுவதும் தக்காளி உற்பத்தி பாதித்த போது இப்பகுதியில், ஓரளவு சீரான வரத்து இருந்தது. இதனால், பிற மாவட்ட வியாபாரிகள் வழக்கத்தை விட, கூடுதலாக உடுமலை சந்தைக்கு வரத்துவங்கினர். விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த சீசனில், கூடுதல் பரப்பில், தக்காளி நாற்று நடவு செய்தனர். இந்நிலையில், தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், தரமான தக்காளி உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்பகுதியில், கொடி கட்டும் முறையை பின்பற்றி, மழைக்காலத்திலும், தரமான தக்காளி உற்பத்தி செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழை காரணமாக, தக்காளி செடிகளில், பூ உதிர்தல் மற்றும் புழுத்தாக்குதல் போன்றவை பரவி வருகிறது. இதனால், தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. மழை தொடர்ந்தால், உற்பத்தி மேலும் சரியும். அறுவடை பணிகளிலும் பாதிப்பு ஏற்படும்,' என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலத்திலும், சந்தைக்கு நிலையான வரத்து மற்றும் தரமான தக்காளி உற்பத்தி செய்ய கொடி கட்டும் முறை உதவிகரமாக உள்ளது. எனவே இந்த தொழில்நுட்பம் குறித்து, தோட்டக்கலைத்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மானியமும் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.