என் மலர்
திருப்பூர்
- திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன.
- மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது
மங்கலம்,செப்.24-
திருப்பூர், கோவை மாவட்ட சிறு ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரகுபதி கூறுகையில்,
திருப்பூர்,கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் இயங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு ரூ.25கோடி மதிப்பிலான நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 12 மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாளை 25-ந்தேதி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு தொழில்முறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இந்த ஒருநாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட ஓ.இ.ஸ்பின்னிங் மில் சங்கம் ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்கிறது.
தமிழக முதல்வர் ஓ.இ. மில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற்று, தமிழகம் முழுவதும் உள்ள சிறு ஓ.இ.மில் நூற்பாலைகளை பாதுகாத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
- 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பல்லடம்:
பல்லடம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையும் வெயில் அதிகமாகவே இருந்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூழல் மாறி வானில் மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. பின்னர் மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது.
சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது . சுமார் 45 நிமிடம் பெய்த திடீர் மழையால் பல்லடத்தில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதற்கிடையே பல்லடம் பகுதியில் உள்ள, அண்ணா நகர், மகாலட்சுமி புரம், பச்சாபாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காந்தி ரோடு பகுதியில் மகாலட்சுமிபுரம் குடியிருப்பில் மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது:-
மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து குடியிருப்பில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விட்டது.
இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்காவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மழையால் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்ததால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் வெளியே வர முடியாமலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் உடனிருப்பவர்கள்,மற்றும் பார்வையாளர்கள் வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வளாகத்திற்குள் புகுந்துள்ள வெள்ள நீரில் சாக்கடை கழிவுகளும் கலந்துள்ளதால் சுகாதாரமற்ற சூழ்நிலையில் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கியுள்ளனர்.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த திடீர் மழையால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சியும், மற்றொருபுறம் பொதுமக்கள் அவதியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- ஜி20 மாநாட்டின்போது உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் இருந்தனர்.
- மக்கள்தொகையை வைத்து பார்த்தால் 850 எம்.பி.க்கள் வேண்டும். அதனால்தான் பெரிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியா என்று சொன்னால் ஊழல் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு காங்கிரஸ் ஆட்சி இருந்தது. 2014-ம் ஆண்டு மோடி வந்த பிறகே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது. சாதாரண மக்களுக்காக ஊழல் இல்லாமல் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
ஜி20 மாநாட்டின்போது உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். நடராஜர் சிலையை வைத்தே மாநாடு நடத்தப்பட்டது. தமிழனாக பிறக்கவில்லை என்றாலும் பிரதமரின் மூச்சு தமிழ் தமிழ் என்றே சொல்கிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழி சாலை பலரின் எதிர்பார்ப்பு. 2024 ஜூன் மாதம் அத்திட்டம் நிறைவு பெறுகிறது. காமராஜர் 12 அணைகள் கட்டினார். தற்போது டாஸ்மாக்கை அமைத்து வருகிறார்கள். மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 6 மாதம் மட்டும் செயல்படுத்தும் திட்டமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். மக்கள்தொகையை வைத்து பார்த்தால் 850 எம்.பி.க்கள் வேண்டும். அதனால்தான் பெரிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தல் என்றால் மோடி. சட்டமன்ற தேர்தல் என்றால் தி.மு.க. இருக்கக்கூடாது என்ற முடிவை எடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
- அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.
பல்லடம்:
பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ( பொ ) புவனேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழ்நாட்டில் தமிழ் மொழியினை வளர்க்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் இடையே பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகள்,பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் அரசு அலுவலக நடைமுறைகளில் தமிழ் ஆட்சி மொழியின் செயலாக்கத்தை கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. இதன்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும்.
மேலும் கோப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் போன்றவற்றை தமிழில் கையாள்வது குறித்து ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ்மொழியில் கோப்புகளை கையாள வேண்டும் என அறிவுறுத்தத்தப்பட்டு உள்ளது.
மேலும் வணிக நிறுவனங்களில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காத நிறுவனங்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் நேற்று நாய் ஒன்று தவறி விழுந்தது.
- லேசான காயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பல்லடம்:
பல்லடம் பஸ் நிலைய வளாகத்திற்குள் இரு சக்கர வாகன நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட சுமார் 10 அடி ஆழமுள்ள குழியில் நேற்று நாய் ஒன்று தவறி விழுந்தது. குழியில் விழுந்த நாய் வெளியேற முடியாமல் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்துள்ளது.
நாயின் சத்தம் கேட்டு பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜா அங்கு வந்து குழியில் விழுந்த நாயை பார்த்து விட்டு பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். குழியில் விழுந்ததால் லேசான காயம் அடைந்த நாயை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
- சரத் பொங்கலூரில் உள்ள பள்ளியில் 12ம்- வகுப்பு படித்து வருகிறான்.
- பலத்த காயமடைந்த சரத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெரிய காட்டு பாளையத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 42 ). இவரது மகன் சரத் (17 ). சரத் பொங்கலூரில் உள்ள பள்ளியில் 12ம்- வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஜெயக்குமார் (24), சஞ்சய் காந்த் (23) ஆகிய இரண்டு பேரும் சரத்திடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு வந்த சரத்தின் தந்தை பாக்யராஜிடமும் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஜெயக்குமார் மற்றும் சஞ்சய் காந்த் ஆகிய இருவரும் பாக்யராஜ் மற்றும் சரத் ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சரத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெயக்குமார் மற்றும் சஞ்சய் காந்தி இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- குளோரினேசன் செய்வதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
- டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் வட்டார சுகாதார துறையின் சார்பில் பொங்கலூர் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல் நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு முறையாக குளோரினேசன் செய்வதற்கான செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, சுரேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் பற்றியும், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
- பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்தநிலையில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிகரித்துவந்தது.
இந்த நிலையில் கழிவு நீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டிற்கு விடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லோகுபிரசாந்த், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சிவகுமார், வார்டு உறுப்பினர்கள், சுகாதார துறையினர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார்.
- விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
உடுமலை:
சிவசேனா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, கொழுமம்-கொமரலிங்கம் பகுதியில் ஸ்ரீ விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.
தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திற்கு யுவசேனா மாநில ஆலோசகரும், சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு யுவசேனா மாநில தலைவர் அட்சயா திருமுருகதினேஷ்கலந்துகொண்டு விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பொறுப்பாளா்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
- 14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா்.
காங்கயம்:
காங்கயம் அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதையொட்டி தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தாா்.அப்போது அவா் கூறியதாவது:-
திருப்பூா் தி.மு.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காங்கயம் அருகே உள்ள படியூாில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறாா். கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள், வாகன நிறுத்தங்கள் தயாா் செய்யும் பணிகள், உணவு கூடம் அமைத்தல் என அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.
நாட்டின் பன்முக தன்மை சிதைக்கப்பட்டு, ஜனநாயகம் சீா்குலைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதை எதிா் கொண்டு எவ்வாறு நாம் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆலோசனை கூட்டமாக இந்த கூட்டம் இருக்கும்.
கூட்டத்தில் 14 கழக மாவட்டங்களில் இருந்து 14 ஆயிரத்து 411 வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொள்கின்றனா். அதாவது 50 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் இதில் கலந்துகொள்கின்றனா்.
அவா்களோடு அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், தலைமை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொள்ள உள்ளனா்.மாலை 4 மணிக்கு தி.மு.க தலைவா் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறாா். இவ்வாறு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.
- வீரராகவப்பெருமாள் கோவிலில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது.
- காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
திருப்பூர்:
புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக உள்ளது. இதில் இந்த மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில் திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் தொடங்குகிறது.
6 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவிலின் வெளியேயும், உள்ளேயும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
இதேபோல் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள திருப்பூர் திருப்பதி கோவிலிலும் வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இங்கு அதிகாலை 5.30 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து தோமாலை சேவை, திருவாராதன ராஜ உபசார பூஜை, பஞ்சாங்க பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, சாற்றுமறை, சகஸ்ரநாம பாராயணம், காலை 9 மணிக்கு உற்சவபெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம், அஷ்டோத்ர அர்ச்சனை, உச்சிகால பூஜை நடைபெற்றது.
காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரைக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதேபோல் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும், பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதிகளிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
- மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
- வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
தீவிர நோய் பரவல் இல்லை என்ற நிலை இருந்தபோதிலும், வரும்நாட்களில் நோய் பரவலை கட்டுக்குள் வைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது.டெங்கு காய்ச்சல் பரவும் தன்மை, ஏடிஎஸ்., கொசுப்புழு உருவாகும் இடம், ஏடிஎஸ்., கொசு உற்பத்தி சுழற்சி முறை மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி கூறப்பட்டது.
கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி, கொசு உற்பத்தி தடுப்பு பணிக்கு அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.






