உடுமலை அருகே சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார். விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை யுவசேனா மாநிலத் தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தொடங்கி வைத்த போது எடுத்த படம். 
விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை யுவசேனா மாநிலத் தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தொடங்கி வைத்த போது எடுத்த படம். 
Published on

உடுமலை:

சிவசேனா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, கொழுமம்-கொமரலிங்கம் பகுதியில் ஸ்ரீ விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திற்கு யுவசேனா மாநில ஆலோசகரும், சிவசேனா திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவருமான ஹரிஹரன் பாலாஜி முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு யுவசேனா மாநில தலைவர் அட்சயா திருமுருகதினேஷ்கலந்துகொண்டு விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொழுமம் ஆற்றில் கரைக்கப்பட்டது.விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com