என் மலர்
திருப்பூர்
- சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
- அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் வருண ஜெபம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது
உடுமலை
உடுமலை திருமூர்த்திநகர் கிராமத்தில் அழகு திருமலை ராய பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதங்களில் சனிக்கிழமை உடுமலையை சுற்றியுள்ள கிராம மக்கள் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போன நிலையில், வடகிழக்கு பருவ மழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தளி தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் அழகு திருமலை ராய பெருமாள் கோவிலில் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் வருண ஜெபம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது.இந்த நிகழ்ச்சியில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மேலாளர் ரகோத்துமன் தலைமை தாங்கினார்.
இதில் வாரியத்தின் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்
- பக்தர்கள் வருகையை முன்னிட்டு மலையடிவாரம் முதல் கோவில் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.அடர்ந்த வனப்பகுதியில் கரடு முரடான மலைப்பாதையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புரட்டாசி சனிக்கிழமை அன்று ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செய்கின்றனர்.
மூன்றாவது சனிக்கிழமையான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் ஏழுமலையானை தரிசிக்க கோவிலுக்கு வந்தனர். அடர்ந்த வனப்பகுதியில் 7 கிலோமீட்டர் தூரம் 7 மலைகளை கடந்து சென்று வழிபட்டனர். பக்தர்கள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர் . மலை மேல் உள்ள வற்றாத சுனையில் தீர்த்தம் எடுத்து அவுல் பச்சரிசி, தேங்காய், ஆகியவற்றை சாமிக்கு படைத்து வழிபட்டனர் .பக்தர்கள் வருகையை முன்னிட்டு மலையடிவாரம் முதல் கோவில் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதித்து ஆய்வு மேற்கொண்டனர். மலைஅடி வாரத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- .வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
- பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.
உடுமலை:
உடுமலையில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக திருமூர்த்தி மலைக்கு செல்வதற்கு பிரதான சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இதன் மூலமாக சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள்,வாகன ஓட்டிகள் பயனடைந்து வருகின்றனர். இதில் உடுமலை திருமூர்த்தி மலை சாலையில் யூனியன் ஆபீஸ் பஸ் நிலையத்தின் அருகே பாதாள சாக்கடை தொட்டி சேதம் அடைந்தது. அதைத் தொடர்ந்து அந்த தொட்டி சீரமைக்கப்பட்டது.இதற்காக அதன் இருபுறங்களிலும் சாலையின் பகுதி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து டிவைடர்கள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் நேற்று அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. டிவைடர் இருந்த காரணத்தினால் வாகன ஓட்டிகளுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டது. அப்போது உடுமலை நோக்கி சென்ற மூன்று கார்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.வாகனங்கள் மிதமான வேகத்தில் சென்றதால் யாருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால் கார்கள் சேதம் அடைந்தது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையில் பாதாள சாக்கடை தொட்டிகள் சேதம் அடைவது தொடர்கதையாக உள்ளது. ஒரு முறை அமைக்கும் போதே அவற்றை தரமானதாக அமைத்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாது. கட்டுமானத்திற்காக வைக்கப்பட்ட டிவைடரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.பிரதான சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடித்தால் இது போன்ற விபத்துக்கள் நிகழாது என்று தெரிவித்தனர்.
- மாநில அரசின் சார்பில் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
- ஏ.டி.எம்., இன்டர்நெட் பேங்கிங், வசதிகளும் உள்ளன.
திருப்பூர்,அக். 8-
வருகிற 9-ந் தேதி உலக அஞ்சல் தினம், 10ந் தேதி, அஞ்சல் சமூக வளர்ச்சி தினம், 11-ந் தேதி அஞ்சல் தலை சேமிப்பு தினம், 12-ந் தேதி, தபால்கள் மற்றும் பார்சல்களுக்கான தினம், 13-ந் தேதி, சாமானியர் நல்வாழ்வு தினம் ஆகியவை கொண்டாடப்படுகிறது.இவை, திருப்பூர் அஞ்சல் கோட்ட அளவிலும், சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது, மாநில அரசின் சார்பில் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.இவை அஞ்சலக வங்கிக்கணக்கு வாயிலாகவும் வழங்கப்படுவதால், அஞ்சலகங்களில் புதிய கணக்கு துவக்கி பயன் பெறலாம்.இதுதவிர, 7.5 சதவீத வட்டி சலுகையில், பிரத்யேக மகளிர் கணக்கு, 2025 மே 31 வரை துவக்கப்படும். 10 வயது பெண் குழந்தைகளுக்கு 8 சதவீதம் வட்டி வழங்கும் வகையிலும், ஆண் குழந்தைகளுக்கு, 7.1 சதவீதம் வட்டி வழங்கும் வகையிலும் சேமிப்பு கணக்கு துவக்கலாம்.
ஏ.டி.எம்., இன்டர்நெட் பேங்கிங், வசதிகளும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
தாராபுரம்:
தாராபுரம் காவல்துறை மற்றும் விழுதுகள் அமைப்பு சார்பில் தகவல் உரிமை அறியும் சட்டம் குறித்து விழிப்புணர்வு வேக நடை போட்டி நடைபெற்றது.
போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வேக நடை போட்டி தாராபுரம் காவல் நிலையம் முன்பு புறப்பட்டு பெரிய கடை வீதி ,டி.எஸ்.கார்னர், பழைய காவல் நிலைய வீதி, கொழிஞ்சி வாடி சாலை வழியாக மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
- புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
- பக்தர்களுக்கு லட்டு ,துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளிரோட்டில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருப்பதி கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெங்கடேச பெருமாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று வெங்கடேச பெருமாளை வழிபட்டனர். உடுமலை ,மடத்துக்குளம் ,பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .மேலும் பக்தர்களுக்கு லட்டு ,துளசி தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் ,அறங்காவலர் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
- விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது.
- ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படும்.
திருப்பூர்
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், அதன் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதைகள், வேளாண்மைத்துறை மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை, வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் பாரம்பரிய நெல் ரகமான தூயமல்லி ரகம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரகங்களின் விற்பனை விலை ஒரு கிலோ ரூ.50 ஆகும். விவசாயிகளுக்கு 50 சதவீத அரசு மானியத்தில் ஒரு கிலோ ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் விதை நெல் வழங்கப்படும். எனவே சம்பா பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், அருகில் உள்ள வேளாண் அலுவலகங்களில் பாரம்பரிய நெல் விதைகளை வாங்கிபயன்பெறலாம்.
இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
- நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் 2023-24 ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கு.கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகராட்சியில் வசிப்பவா்கள் 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரியை செலுத்திகொள்ளலாம்.
இதேபோல நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
- காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
அவிநாசியில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த வேண்டும், பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி வாரச் சந்தை வளாகத்துக்கு சாலையோரக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசியில் அக்டோபா் 9-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
இந்நிலையில், பல்வேறு கட்சியினரின் பங்கேற்பு கூட்டம் அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளா் ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, பொறுப்பாளா்கள் சண்முகம், பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளா் கோபால், அதிமுகவைச் சோ்ந்த ஜெயபால், மூா்த்தி, மதிமுகவை சோ்ந்த பாபு, காங்கிரஸ் கட்சியின் பேரூராட்சி உறுப்பினா்கள் கோபாலகிருஷ்ணன், சாய்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் அறிவித்துள்ள கடையடைப்பை திரும்பப் பெற வேண்டும், அவிநாசி நகரப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையோர வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், பேரூராட்சி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல் துறை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து சாலையோர வியாபாரிகளின் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஈரோடு வி.கே.சி.சி. அணி வெற்றி பெற்று பரிசு கோப்பையையும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது.
- திருப்பூரில் முதல் முறையாக பிங்க் பந்தில் இப்போட்டி நடத்தப்பட்டது
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்தது. திருப்பூரில் முதல் முறையாக பிங்க் பந்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. குறிப்பாக ரஞ்சி தொடர், டி.என்.பி.எல். ஆகிய தொடர்களில் விளையாடிய வீரர்களும் இதில் கலந்து கொண்டு ஆடினர். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், இறுதி போட்டிக்கு ஈரோடு வி.கே.சி.சி. அணியும், திருப்பூர் தேசிங்கு வாரியர் அணியும் தகுதி பெற்று, விளையாடியது. முடிவில் ஈரோடு வி.கே.சி.சி. அணி வெற்றி பெற்று பரிசு ேகாப்பையையும், ரூ.1 லட்சம் ரொக்க பரிசையும் தட்டி சென்றது. திருப்பூர் தேசிங்கு வாரியர் அணி 2-வது இடத்தை பிடித்தது. அந்த அணிக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மேலும் 3-வது இடம் பிடித்த திருப்பூர் எம்.எஸ்.சி.சி. மற்றும் சென்னை வி.எல்.சி.சி. அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பெருமாநல்லூர் கேலக்ஸி கிரிக்கெட் அகாடமி தலைவர் ஜான் பிரபாகரன் செய்து இருந்தார்.
திருப்பூர்
தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று கலந்தாய்வு செய்தனர்.
மின்சார நிலைகட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூரியஒளி சக்தி மின் உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி, தொழில்துறையினரின் நிலையை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
நாளை 9-ந் தேதி காலை தொழில்துறையின் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க வரும் தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும். அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் வர வேண்டும். ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் அனைவரும் வர வேண்டும். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
- கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.
- இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
பல்லடம்:
கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பு சார்பில் மின் கட்டணம் ரூ.380ஆக இருந்ததை 550 உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் எனவும், பீக் ஹவர் நேர கட்டணம் மற்றும் சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம்பேட்டை பகுதியில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காததால் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 25-ந்தேதி ஒருநாள் மட்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் அடுத்த கட்ட போராட்டமாக நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கோரிக்கை மனு அளிப்பது எனவும், தொடர்ந்து 16-ந்தேதி அன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் எனவும் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் அஸ்வத் முருகேசன் தெரிவித்தார்.






