search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness Competition"

    • போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

     தாராபுரம்:

    தாராபுரம் காவல்துறை மற்றும் விழுதுகள் அமைப்பு சார்பில் தகவல் உரிமை அறியும் சட்டம் குறித்து விழிப்புணர்வு வேக நடை போட்டி நடைபெற்றது.

    போட்டியை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    வேக நடை போட்டி தாராபுரம் காவல் நிலையம் முன்பு புறப்பட்டு பெரிய கடை வீதி ,டி.எஸ்.கார்னர், பழைய காவல் நிலைய வீதி, கொழிஞ்சி வாடி சாலை வழியாக மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் நீதிபதி தர்ம பிரபு மணிகண்டன், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பரிசு வழங்கினர்.   

    • குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி வழங்கினார்
    • மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்

     ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் வளர்மதி தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள்.

    மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பொதுப்பிரச்சினைகள் குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 201 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றார்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு தெரிவித்திட உத்தரவிட்டார்.

    முன்னதாக ராணிப்பேட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கொண்டு வட்டார அளவில் போட்டி கள் நடத்தப்பட்டடது.

    இதில் வெற்றி பெற்ற 72 மாணவர்களுக்கு ரூ.1,000 பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழை கலெக்டர் வளர்மதி வழங்கினார். இதில் பல்வேறு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை மக்கள் இயக்கம் சார்பில் நடை பெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • காட்டுப்புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் டெபில், பெஞ்சுகள் வழங்கப்பட்டது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி (மேற்கு) நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளிமாணவ-மாணவிகளுக்கு காட்டுப்புத்தூர் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பெற்ற விழிப்புணர்வு பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதாசுரேஷ் தலைமை வகித்தார்.

    துணைத் தலைவர் சுதாசிவசிவராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் நீதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்அமீது வரவேற்றார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.மேலும் ரூபாய் 5 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டெபில் பெஞ்சுகளை வழங்கினார்.

    இதில் தொட்டியம் பேரூராட்சித் தலைவர் சரண்யாபிரபு, தொட்டியம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால.ந திருஞானம் காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.எஸ்.டி. செல்வராஜ் தொட்டியம் நகர கழக செயலாளர் விஜய் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகிகள் பேரூராட்சி பணியாளர்கள் பள்ளி ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை, செஸ் ஒலிம்பியாட் , விழிப்புணர்வு போட்டி, சபாநாயகர்
    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    நெல்லை:

    44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

    போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில் முதன்முறையாக இந்தப் போட்டி நடப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட பகுதியில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி இன்று நடைபெற்றது. அதனை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர். ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பதிவுபெற்ற கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் நலவாரிய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் ஹேமலதா வரவேற்றார்.

    சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் பொன்குமார் ஆகியோர் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் கட்டுமானம், உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு கல்வி, இயற்கை மரணம், ஓய்வூதியம், விபத்து மரணம் என 1430 பேருக்கு ரூ. 32 லட்சத்து 57 ஆயிரத்து 400, கட்டுமான தொழிலாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 2402 பேருக்கு ரூ. 40 லட்சத்து 8,676,

    ஓட்டுநர் தொழி–லாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள் 3028 பேருக்கு ரூ. 44 லட்சத்து 85,789 என மொத்தம் 6860 பேருக்கு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 865-க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    முடிவில் தொழிலாளர் உதவி ஆணையர் குலசேகரன் நன்றி கூறினார். 

    ×