என் மலர்
திருவாரூர்
- வாஞ்சிநாதர் மங்காளம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்மராஜா மற்றும் வாஞ்சிநாதரை தரிசித்தனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் அருள்மிகு வாஞ்சிநாதர் சமேத மங்களாம்பிகை திருக்கோவிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தீர்த்தவாரியை முன்னிட்டு வள்ளி தேவசேனா முருகப்பெருமான் விநாயகர் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு வசந்த மண்டபத்தில் தீபாரணை நடைபெற்ற பின்னர் ஆலயத்தின் வெளியே நான்கு வீதிகளில் நடன வாகனத்தில் எழுந்துருள் செய்யப்பட்டு ஆலயத்தில் உள்ள குப்த கங்கையில் அசுர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாலாளையம் செய்யப்பட்டுள்ளதால் கோவில் தற்போது புனரமைக்க வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகை மாத கடை ஞாயிறு தினத்தை முன்னிட்டு வாஞ்சிநாதர் மங்காளம்பிகை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அசுர தேவர் சுவாமி குப்த கந்தையில் வைத்து அபிஷேகம் செய்தனர்.
ஆனால் 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் குப்தகங்கையில் நீராடி எமதர்ம ராஜா மற்றும் வாஞ்சிநாதர் சாமியை தரிசித்து செல்கின்றனர். மேலும் காவல் துறை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
- குத்தகைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை குறைக்க வேண்டும்.
- குத்தகை சாகுபடிதாரர்களின் குத்தகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் ஒன்றிய ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தலைவர் துரையரசன் தலைமையில் நடைபெற்றது.
நாகை மாவட்ட தலைவர் விவேக் தியாகராஜன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங் கிணைப்பாளர் இருதயதாஸ் வரவேற்று பேசினார்.
மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர் பேசினார். இந்த கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற பைகாரா போன்ற அருவிகளை தமிழக எல்லையில் உள்ள காவிரியோடு இணைக்க வேண்டும். குத்தகை சாகுபடிதாரர்களின் குத்தகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும்.
கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில பொதுச்செயலாளர் பாபு கந்தவேல், மாநில துணைத்தலைவர்கள் வீரமணி, செல்வம், இணைச்செயலாளர் இளையராஜா, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவசரன், ஒன்றிய நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார், நடராஜன், சித்திரவேல், சாமிநாதன், கேசவன், தினகரன், பாண்டியன், மங்களூர் சக்திவேல் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.
முடிவில் ஒன்றிய தலைவர் மோகன் ராஜ் நன்றி கூறினார்.
- வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.
- மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.
திருவாரூர்:
திருவாரூர் வட்டத்திற்கு ட்பட்ட கங்களாஞ்சேரி, ஓடாச்சேரி, மாங்குடி ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கங்களாஞ்சேரி கிராமத்தில் வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தினை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஓடாச்சேரி கிராமத்தில் வெட்டாறு நீரொழுங்கி, மாங்குடி கிராமத்தில் பாண்டவயாறு கதவணை ஆகிய பகுதிகளில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதனை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், உதவி பொறியாளர் தங்கமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.
- பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி தவித்து வந்தார்.
- மூதாட்டிக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் காட்டூர் பஸ் நிலையத்தில் கடும் குளிரிலும், மழையிலும் ஒரு வயதான மூதாட்டி ஒருவர் தவித்து வந்தார்.
இது பற்றி காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரபாகர் அளித்த தகவலின் படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுறுத்தலின் பேரில் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் அறிவுரையின் பேரில் மாவட்ட குழந்தைகள் குற்ற பாதுகாப்பு காவல் ஆய்வாளர் கண்ணகி, தலைமை காவலர் சத்யா, ஓ. எஸ். சி. நிர்வாகி சுமிதா, மெர்லின், சமூகப் பணியாளர்கள் கீர்த்தி, ஆகாஷ், வினோத் ஆகியோர்கள் உதவியுடன் மூதாட்டி மீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு உரிய மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கு உதவி செய்த பாரதி தொண்டு நிறுவன இயக்குனர் நாகராஜன், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறினார்.
அப்போது உடன் காப்பக செவிலியர் சுதா, ஒருங்கிணைப்பாளர் சரவணன், உதவியாளர் சங்கர் ஆகியோர் இருந்தனர்.
- மாவட்ட வருவாய் அலுவலருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
- 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்டவைகள் கையிருப்பில் உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையருமான இல.நிர்மல்ராஜ், மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது :-
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24/7 இயங்ககூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் 04366-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழியாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு தகவல் தொடர்பு சாதனம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை கலெக்டர் நிலையிலான 10 குழுக்கள் அனைத்து ஒன்றியங்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத வகையில், புயல் சீற்றங்கள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவையான அளவு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1,லட்சத்து 30 ஆயிரத்து 25, மணல் மூட்டைகளும், 84ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது.
106 மரம் அறுக்கும் எந்திரங்கள், 116 பொக்லின் எந்திரங்கள், நீர் இறைக்கும் எந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சித்ரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- கொரடாச்சேரி ஒன்றியத்தில் பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விழாவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், ஒன்றிய பொறியாளர் ரவீந்திரன், கொரடாச்சேரி பேரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவேந்தன், ஊராட்சி தலைவர்கள் இலையூர் காமராஜ், கரையாபாலையூர் மீனா கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் மதிப்பில் அபிவிர்தீஸ்வரம் மையத்தான் கொல்லையில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
ரூ.60 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் மட்டும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75.45 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவை திருட்டு.
- நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
நீடாமங்கலம்:
திருவிடைமருதூர் உட்கோட்டம், நாச்சியார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட பழவாத்தான்கட்டளை, பாரதி நகர் தெற்கு, நேதாஜி தெருவை சேர்ந்தவர் முகில் (வயது 38).
இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மாடியில் தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில், காலை வீட்டின் கீழ் பகுதியில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்து.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதங்களை கடந்து சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
- இரவு 9 மணிக்கு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ருக் (அன்னதானம்) வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்காவில் புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடை பெற்றது. கொட்டும் மலையிலும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் தர்கா பாரம்பரிய முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மதங்களைக் கடந்து சாதி மத வேறு இல்லாமல் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
8.12.22 வியாழக்கிழமை மஹாரிபு தொழுகைக்குப் பின் புனித திருக்குர்ஆன் ஷரிப் ஓதி தமாம் செய்து ஆண்டவரின் புனித மௌலது ஷரிப் ஓதி துவா செய்து இரவு 9 மணிக்கு புனிதக் கொடி இறக்கப்பட்டது. அனைவ ருக்கும் தப்ருக் அன்னதானம் வழங்கப்பட்டது.
இறுதியில் முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒத்துழைத்த அனைத்து தரப்பு
மக்களுக்கும் ஊடகத்து றைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒத்து ழைப்பு தந்த அனைவருக்கும் தர்கா நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார்.
- மாணவர்களுக்கு எளிய முறை அறிவியல் சோதனைகளை செய்து மகிழ்வித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட அளவிலான வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் அம்மையப்பன் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயா தலைமை தாங்கினார்.
மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆனந்தன், வானவில் மன்ற முதன்மை பயிற்றுனர் சங்கரலிங்கம், மேலராதாநல்லூர் பள்ளி தலைமையாசிரியர் சரவணராஜன், குடவாசல் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வானவில் மன்ற செயல்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் ரேவதி, மாவட்ட தலைவர் பொன்முடி, மகேந்திரன், சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக பள்ளி அறிவியல் ஆசிரியர் அமுதா அனைவரையும் வரவேற்றார்.
முடிவில் பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். விழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வானவில் மன்ற கருத்தாளர்கள் மாணவர்களுக்கு எளிய முறை அறிவியல் சோதனைகளை செய்தும், மாணவர்களை செய்ய சொல்லியும் மகிழ்வித்தனர்.
- மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- நகரின் முக்கிய பகுதிக ளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கள்ளிக்குடி கிராமத்தில், ஒருங்கிணைந்த நோய் தடுப்பு, தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் ஒட்டுமொத்த தூய்மை பணிகள் கடந்த மூன்று நாட்களாக துணை இயக்குநர் டாக்டர். ஹேமச்சந்த காந்தி உத்தரவி ன்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.
கிள்ளிவளவன் மேற்பார்வையில் நடைபெற்றது. இப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் கஸ்தூரி செந்தில் தொடக்கி வைத்தார்.
இதில் கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தூய்மை காவலர்கள், மஸ்தூர் பணியாளர்கள், நூறுநாள் திட்ட பணியாளர்கள் ஆகியோர் தேவையற்ற, டயர், பிளாஸ்டிக், பானை போன்ற பொருட்களை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக வண்டிகள் மூலம் அப்புறப்படுத்தினர்.
மக்களிடையே தொழுநோய், தேமல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கீழத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் புகைமருந்து அடிக்கப்பட்டது.
இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், வட்டார மருத்துவம் சாரா மேற்பா ர்வையாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், கதிரவன், பால சண்முகம், விக்னேஷ், ஊராட்சி செயலாளர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இப்பணியை மாவட்ட பூச்சி இயல் அலுவலர் சிங்காரவேலு ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக செயலாளாற்றினார்.
- சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி ந.சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
இவர் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போது இருந்த வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மேலும் தி.மு.க. மாவட்ட அவை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சோம.நடேசமணி, சோம.செந்தமிழ்செல்வன் என்ற இரண்டு மகன்களும் மற்றும் ராணி சேகர் என்ற மகளும் உள்ளனர்.
இதில் சோம.செந்தமிழ்செல்வன் நீடாமங்கலம் பெருந்தலை வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டுள்ளது.
மன்னார்குடி:
மன்னார்குடிஅரசு உதவி பெறும் தூயவளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக பாரம்பரிய உணவு வகைகள் தயாரித்தல் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் திட்ட அலுவலர் மேரி செல்வராணி வரவேற்று பேசினார். தலைமையாசிரியை சகோதரி ஜெபமாலை தலைமை வகித்தார்.
நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா மற்றும். மன்னை ஜேசிஸ் சங்க முன்னாள் தலைவர் உழவன் அருண் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
என்.எஸ்.எஸ். மாணவிகள் தங்கள் வீட்டில் தயாரித்த பாரம்பரிய உணவு வகை பொருட்களை கண்காட்சிக்கு
வைத்திருந்தனர். கண்காட்சி நடுவர்களாக இருந்து ராஜப்பா மற்றும் அருண் ஆகியோர் பரிசுக்குரிய உணவு வகைகளை தேர்ந்தெடுத்தனர்.
போட்டியில் தர்ஷினி முதல் பரிசையும். திவ்யதர்ஷினி 2ம் பரிசையும் செ. துர்கா 3ம் பரிசையும் பெற்றனர். சிறப்பு பரிசுகளாக முடவாட்டம் கிழங்கு அடை மற்றும் கேழ்வரகு களியுடன் மீன் குழம்பு தயார் செய்திருந்த வி.தீபிகா, சுண்டைக்காய் வடை தயார் செய்திருந்த மு.ப்ரீத்தி தேவி, கவுனி அரிசி பொங்கல் தயார் செய்திருந்த மீரா தர்ஷினி ஆகியோர் சிறப்பு பரிசுகளையும் பெற்றனர்.
பள்ளியில் பயிலும் 3800 மாணவிகளும் ஆசிரியைகளும் கண்காட்சியை பார்வையிட்டு பாரம்பரிய உணவு பொருட்கள் தயார் செய்யும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். முன்னதாக பாரம்பரிய நெல் வகைகள் சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆதிரெங்கம் நெல் ஜெயராமனின் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
உதவி திட்ட அலுவலர் ஷோபனா நன்றி கூறினார்.






